மீனவர் பிரச்சினைக்கு தீர்வில்லை : மனோகணேசன்
மீனவர்களின் பிரச்சினை தீர்வு மற்றும் எரிபொருள் மானியம் என்பவற்றை கோரி நேற்று மீனவர்கள் கையொப்பம் திரட்டும் போராட்டம் ஒன்றை நடத்தி இருந்தனர்.கொழும்பு கோட்டை தொடரூந்து நிலையத்துக்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.இதில் மீனவர்களுடன், மனோகணேசன் தலைமையிலான ஜனநாயக மக்கள் முன்னணி, நவசமசமாஜகட்சி போன்ற அரசியல் கட்சிகளும் கலந்துக் கொண்டிருந்தன.
இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைகின்றமைக்கு எதிராக
நடவடிக்கை எடுக்குமாறு இதன் போது மீனவர்கள் வலியுறுத்தி இருந்தனர்.அத்துடன் தங்களுக்கான எரிபொருள் மானியத்தையும் உரிய வகையில் வழங்கி
வைக்குமாறும் கோரப்பட்டது.
இதன் போது உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன்,
மீனவர்களின் பிரச்சினைக்கு தீர்வு காண, இலங்கை மீன்பிடித்துறை அமைச்சு
தோல்வி கண்டிருப்பதாக தெரிவித்தார்.
You can leave a response, or trackback from your own site.
Leave a Reply