விசாரணைக்குழுவுக்கு அனுமதி வழங்கும் பொறுப்பை பாராளுமன்றிடம் ஒப்படைக்க தீர்மானம்: ஜனாதிபதி

ஜெனீவா மனித உரிமை தொடர்பான குழு இங்கு விசாரணை நடத்த அனுமதி கோரியுள்ள நிலையில், அதுபற்றிய தீர்மானம் எடுக்கும் பொறுப்பை தான் பாராளுமன்றத்துக்கு ஒப்படைக்கப்போவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். பொலன்னறுவை மெதிரிகிரிய தேசிய பாடசாலையில் மஹிந்தோதய விஞ்ஞான ஆய்வு கூடத்தை திறந்து வைத்து உரையாற்றிய ஜனாதிபதி, நாட்டை பயங்கரவாதத்தில் இருந்து மீட்டெடுத்து அபிவிருத்தியுடன் கட்டியெழுப்பி வருகையில், ஜெனீவாவில் எமக்கு எதிராக குற்றஞ்சாட்டப்பட்டு விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

நாம் யுத்தக் குற்றம் செய்ததாகக் கூறி குப்பைகளை தோண்ட சிலர் முயற்சிக்கின்றனர். இது பற்றிய தீர்மானத்தை எடுக்கும் பொறுப்பை பாராளுமன்றத்துக்கு வழங்க உள்ளேன் என்றும் கூறினார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply