பெளத்த சமய போதனையானது வாழ்க்கை போக்கின் அடித்தளம் : மஹிந்த ராஜபக்ஷ
எமது அன்பு, கருணை, சகிப்புத்தன்மை ஆகிய பண்புகள் காரணமாக எமது தேசம் ஏனைய தேசங்களின் நன்மதிப்பையும் நட்புறவையும் ஈட்டிக் கொள்ள வழி வகுத்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது பொசொன் பண்டிகைக்கான வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். பெளத்த சமயத்தின் செய்தியுடன் எமது நாட்டுக்கு மஹிந்த தேரரின் வருகை தந்ததை நினைவுகூர்ந்து இலங்கை வாழ் பெளத்தர்களான நாங்கள் பொசொன் பண்டிகையை மிகுந்த பக்தியுடன் கொண்டாடுகிறோம். மஹிந்த தேரரினால் இங்கு 2250 ஆண்டுகளுக்கு முன்னர் கொண்டு வரப்பட்ட பெளத்த சமயப் போதனையானது எமது மக்களின் கலாசார மற்றும் வாழ்க்கைப் போக்கின் அடித்தளமாக இருந்து வந்துள்ளது.
மனிதன் உட்பட ஏனைய எல்லா ஜீவராசிகளினதும் உயிர்களையும் தாவரங்கள், நிலம், நீர் வளங்கள் எல்லாவற்றிலும் இருப்பையும் மதிக்கின்ற எமது சிந்தனைக்கு பெளத்த சமயப் போதனைகளே அடிப்படையாகும். மேலும் இது எமது அன்பு, கருணை சகிப்புத்தன்மை ஆகிய பண்புகளின் காரணமாக எமது தேசம் ஏனைய தேசங்களின் நன்மதிப்பையும் நட்புறவையும் ஈட்டிக் கொள்ள வழி வகுத்தது.
மஹிந்த தேரரினால் எமக்குக் கொண்டு வரப்பட்ட பெளத்த போதனைகளை விட நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு வேறு வழிகள் கிடையாதென நாம் உறுதியாக நம்புகிறோம் என்ற வகையில், இன்றும்கூட நாம் சரியான பாதையிலேயே இருக்கின்றோம். எனவேதான் கோபம், குரோதங்களை விட்டு நீங்கிய அன்பு, கருணை என்பவற்றால் வளம்பெற்ற ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்ப முடிந்துள்ளது.
அந்த வகையில் சகிப்புத்தன்மையும் ஏனைய கருத்துக்களை மதிப்பதும் எமக்கு மத்தியில் நல்லிணக்க உணர்வை மேலும் பலப்படுத்துகின்றது. எமது மக்களால் மதிப்புடன் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள மஹிந்த தேரரினால் முன்வைக்கப்பட்ட அறிவுபூர்வமான சிந்தனைக்கான தேவை எமது பலத்தின் மிகப் பெரும் மூலமாகும். தம்மபதத்தில் இப்படிக் குறிப்பிடப்படுகிறது.
உட்டானவதோ ஸதிமதோ . . .
“முயற்சியும் குற்றமற்ற செய்கையும் சாந்தமும் தன்னடக்கமும் உள்ளவர்களாய் நல்லொழுக்கத்துடன் இருக்கும் முயற்சி உடையோரின் புகழ் மென்மேலும் வளர்கிறது”
எனவே, நாம் உண்மையான பெளத்தர்களாக சிறந்த சிந்தனை மற்றும் செயல்கள் ஊடாக எமது ஆன்மீக மற்றும் சமூக வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக முயற்சிக்க வேண்டும். ஆயிரக்கணக்கான வருடங்களுக்கும் மேலாக புத்த சமயத்தை பாதுகாத்த ஒரு தேசம் என்ற வகையில் இந்த பொசொன் காலத்தில் அரஹத் மஹிந்த தேரரின் நினைவுகளுக்கு நாங்கள் செலுத்த முடியுமான மிக உயர்ந்த நன்றி இதுவாகும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply