G – 77 மாநாட்டில் இன்று ஜனாதிபதி மஹிந்த உரை ஜனநாயகத்துக்கான உயர் விருதும் பெறுகிறார்
பொலிவியாவில் இடம்பெறும் ஜீ௭7 மாநாட்டில் கலந்துகொள்வதற்காகச்சென்றுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன்று ஞாயிற்றுக்கிழமை அங்கு உரையாற்றவுள்ளார். குறித்த மாநாடு பொலிவியா, சாண்டா குறூஸ் நகரில் நேற்றுச் சனிக்கிழமை ஆரம்பமானது. இம் மாநாட்டில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூனும் கலந்து கொண்டுள்ளார். இந்நிலையில் ஜனா திபதிக்கு பொலிவியா நாட்டின் அமைதி மற் றும் ஜனநாயகத்துக்கான உயரிய விருது வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply