ஈராக்கின் மேலும் ஒரு நகரத்தை போராளிகள் கைப்பற்றினர்

ஈராக் மற்றும் சிரியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற போராளிகள் குழு செயல்பட்டு வருகிறது. அல்கொய்தாவின் துணை அமைப்பான இந்த இயக்கம் ஈராக் மற்றும் சிரியாவின் ஒரு பகுதியை இணைத்து இஸ்லாமிய தேசம் என்ற பெயரில் தனி நாட்டை உருவாக்க முயற்சித்து வருகிறது. ஏற்கனவே இந்த இயக்கம் சிரியாவின் சில பகுதிகளை தங்கள் வசம் கைப்பற்றி வைத்துள்ளது. இதற்கிடையே கடந்த 15-ம் தேதி ஈராக்கில் 2–வது பெரிய நகரான மொசூல் நகரை அவர்கள் கைப்பற்றினார்கள். சுமார் 5 லட்சம் தீவிரவாதிகள் திடீரென நகரின் பல்வேறு பகுதிகளுக்குள் புகுந்து ஒட்டுமொத்த நகரையும் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்த ராணுவ வீரர்கள் மற்றும் போலீசார் தப்பி ஓடினார்கள். அவர்களுடன் அந்த நகரில் வசித்த பெரும்பாலான மக்களும் வெளியேறினர். தற்போது மொசூல் நகரம் போராளிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது.

இதேபோல், கர்பலா, நஜாஃப் மற்றும் தலைநகர் பாக்தாத் ஆகியவற்றை கைப்பற்றும் முயற்சியில் இறங்கியுள்ள போராளி குழுவினர், சிரியாவின் எல்லையோரம் உள்ள முக்கிய நகரத்தை இன்று கைப்பற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply