அர­சாங்­கத்தின் கைக்­கூ­லி­யா­கவே ஜம்இய்­யத்­துல்உ­லமா செயற்­ப­டு­கி­றது:அசாத்­சாலி

அர­சாங்­கத்தின் கைக்­கூ­லி­யா­கவும் இன்­னொரு முக­மா­கவும் ஜம்­மி­யத்­துல்உ­ல மா செயற்­ப­டு­கின்­றது. அது மக்­க­ளுக்கு நீதியை பெற்றுக் கொடுக்­கா­வி­டினும் பர­வா­யில்லை. நாம் எம் உரி­மைக்­காக போராடும் போது தடைக்­கல்­லாக இல்­லாமல் இருக்க வேண்டும் என மத்­திய மாகாண சபை உறுப்­பி­னரும் தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலை­வ­ரு­மான அசாத்­சாலி தெரி­வித்தார். பேரு­வளை, அளுத்­கம ஆகிய இடங்­க­ளுக்கு ஜனா­தி­பதி நேர­டி­யாக விஜயம் செய்து பாதிக்­கப்­பட்ட மக்­களை சந்­தித்­ததாக ஊட­கங்களில் வெளி­வந்த செய்­திகள் முற்று முழு­தாக பொய்­யான ஒன்று. உண்­மையில் ஜனா­தி­பதி அங்­குள்ள மாவ ட்ட செய­ல­கங்­க­ளுக்கு மட்­டுமே விஜயம் செய்­துள்ளார். மாறாக மக்­களை சந்­திக்­க­வில்லை என்று அவர் மேலும் தெரி­வித்தார். கொழும்பில் நேற்று முன்தினம் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டின்­போது அவர் இவ்­வாறு தெரி­வித்தார்.

அவர் தொடர்ந்து அங்கு உரை­யாற்­று­கையில்;

ஜம்­இய்யத்­துல்­லாவின் கண்­டிக்­கிளை கண்­டியில் ஹர்த்தால் செய்ய வேண்டாம். வர்த்­தக நிலை­யங்­களை திறக்­கு­மாறு அறி­வித்­துள்­ளது. இது முஸ்­லிம்கள் என்ற வகையில் மிக வெட்­கக்­கே­டான விடயம். ஆயினும் கண்­டியில் மக்கள் ஹர்த்­தாலை அனுஷ்­டித்­தனர். ஜம்­இய்­யத்­துல்உலமா மக்­களின் நலன் கருதி எவ்­வித நட­வ­டிக்­கை­க­ளிலும் ஈடு­ப­டு­வ­தில்லை. மாறாக அர­சாங்­கத்தின் கூலி­யா­கவே அர­சாங்க முக­மூ­டியை அணிந்து கொண்டு செயற்­ப­டு­கின்­றது.

இந்த நாட்டில் தமிழ், முஸ்லிம், கிறிஸ்­தவ மக்­க­ளுக்கு மட்­டுமே உரிமை இல்லை என்று நினைத்தோம். ஆனால், வட்­ட­ரக்க விஜி­த­தேரர் இன்று தாக்­கப்­பட்­ட­மையை அடுத்து ஒட்­டு­மொத்த மக்­களின் உரி­மைக்­கு­ரலும் ஒடுக்­கப்­பட்­டுள்­ளது என்­பது தெளி­வா­கி­றது.

இது ஒரு பௌத்த நாடு என்று மார்த்­தட்­டு­ப­வர்கள் இப்­போது தங்கள் முகத்தை எங்கே வைப்­பார்கள்? பொது­ப­ல­சே­னாவின் அடா­வ­டித்­த­னங்­களை இன்றும் அரசு கண்டு கொள்­ளாமல் இருப்­பது வேடிக்­கை­யாக உள்­ளது.

ஞான­சார தேரர் கடந்த 2 வரு­ட­ங்களாக அர­சாங்­கத்­தையும் கெபினட் மந்­தி­ரி­க­ளையும் மிகக் கேவ­ல­மான வார்த்தைப் பிர­யோ­கங்கள் மூலம் திட்­டு­வது மட்டும் அல்­லாது மதக் கல­வ­ரங்­களை நாட­ளா­விய ரீதியில் நடத்­து­கின்றார். அவ­ருக்கு எதி­ராக குரல் கொடுத்தால் வன்­மு­றை­க­ளையும் அரா­ஜ­கங்­க­ளையும் கட்­ட­விழ்த்து விடு­கிறார். அவ­ருக்கு எதி­ராக ஏன் மஹிந்த அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுக்­காமல் உள்­ளது என்­பது கேள்விக் குறி­யாக உள்­ளது.

இன்று அட்­டா­ளைச்­சே­னையில் மகஜர் கொடுக்கச் சென்ற அன்­ஸிலை இந்த அர­சாங்கம் தாக்­கி­யுள்­ளது. அவர் வைத்­தி­ய­சா­லையில் அனு­ம­திக்­கப்­பட்டார்.
நாட­ளா­விய ரீதியில் நாம் ஹர்த்­தாலை அனுஷ்­டிக்­கின்றோம் என்று அறி­வித்­ததும் அதனை குழப்­பு­வ­தற்­கான பல்­வேறு சதிகள் அரங்­கே­றின. ஆயினும் ஒற்­று­மை­யாக எம் ஹர்த்­தாலை நாம் அமை­தி­யுடன் நடத்தி உள்­ளமை மகிழ்ச்­சி­ய­ளிக்­கின்­றது.

ஜே.ஆர். ஆட்­சி­யினை போன்று மீண்டும் ஒரு பயங்­கர இனக்­க­ல­வ­ரத்தை இந்த நாட்டில் ஏற்­ப­டுத்­தவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. அத்­தோடு விடு­தலை புலி­களின் காலத்­தைபோல பதற்­ற­மான ஒரு சூழ்­நி­லையை ஏற்­ப­டுத்த திட்­ட­மிட்டு செயற்­ப­டு­கின்­றது.

பொது­ப­ல­சேனா என்­கின்ற தீவி­ர­வாத அமைப்பை இதற்­கா­கத்தான் தீனி போட்டு வளர்க்­கின்­றது. ஆனால், இந்த அர­சாங்­கத்­திற்­கான சாவு­மணி ஜெனீ­வாவில் அடிக்க ஆரம்­பித்­து­விட்­டது.

அளுத்­க­மவில் பைகளில் கற்­களை சேர்த்து வைத்­தி­ருந்து அதனை பள்­ளிக்குள் இருந்­த­வர்கள் மீது அடித்து தாக்­கியே கல­வ­ரத்­தினை பொது­ப­ல­சே­னா­வினர் ஆரம்­பித்­துள்­ளனர். இதற்கான வீடியோ காட்சி ஆதாரம் என்னிடம் உள்ளது. இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்குமா?
நீதி அமைச்சராக இருந்து கொண்டு ஹக்கீம் நீதியை நிலைநாட்டாது இருப்பது வெட்கக்கேடான விடயமாக உள்ளது. ஜனாதிபதிக்கு காக்கா பிடிப்பவராக மட்டுமே அவர் உள்ளார். எல்லாவிதமான வன்முறைகளையும் அரசாங்கம் கட்ட விழ்த்து மக்களை அழிக்கிறது. இதன் எதிரொலி ஜெனீவாவில் கேட்கும் என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply