கொழும்புத் துறைமுகத்தினூடாக புலிகளுக்கு ஆயுதங்கள் பரிமாற்றம் : கெஹலிய ரம்புக்வெல்ல
2002 முதல் 2004 காலப்பகுதியில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு கனரக ஆயுதங்கள், நவீன உபகரணங் கள், வெடி பொருட்கள், வாகனங்கள் என்பன கொழும்புத் துறைமுகத்தினூடாகவே கொண்டு செல்லப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல நேற்று தெரிவித்தார்.இவற்றுடன் தொடர்புடைவர்கள், தொடர்பான தகவல் களும், விபரங்களும் விரைவில் வெளியிடப்படும் என்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பான பேச்சாளர் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் தெரிவித்தார்.
தென்பகுதியிலிருந்து பதிவுசெய்யப்படாத வாகனங்கள், கனரக வாகனங்கள், என்பவற்றுடன் வெளிநாட்டிலிருந்து கொழும்பு துறைமுகத்தினூடாக கொள்கலன்களில் சுங்கப் பரிசோதனையின்றியும் சுங்கவரி செலுத்தாமலும் நவீன அச்சு உபகரணங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரண ங்கள் என்பவற்றை கொண்டு சென்றுள்ளனர்.
இவற்றுக்கு பின்னணியில் பலம் வாய்ந்த அரச அதிகாரிகள், வர்த்தகர்கள், பாதாள உலக கோஷ்டியினரும் உள்ளமை தீவிர விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. விசாரணைகளின் இறுதியில் மிக விரைவில் இவர்கள் பற்றிய விபரங்கள் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல கூறினார்.
மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள படை யினர் புலிகளின் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட இவ்வகை யான நவீன ஆயுதங்கள், கனரக வாகனங்கள், நவீன உபகரணங்கள் அச்சு இயந்திரங்கள், தகவல் தொழில்நுட்ப உபகரணங்கள் தொடர்பான விசாரணைகளின் போதே இந்த உண்மை கண்டுபிடிக்கப்பட்டதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
இதேவேளை சுங்கத் திணைக்களத்தின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு சுங்கவரி செலுத்தாமல், இலங்கை அரசுக்கு கிடைக்க வேண்டிய மேலதிக வருவாயையும் இல்லாமல் செய்து சட்டவிரோதமாக பொருட்களை இலங்கைக்குள் கொண்டு வருவதை தடுப்பதற்கும் ஏதுவாக பொலிஸ் மா அதிபர் விசேட நடவடிக்கைப் பிரிவொன்றை ஏற்படுத்தியுள்ளார்.
கடந்த காலங்களில் இவ்வாறு கண்டேனர்களில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்ட நவீன உபகரணங்கள், வெடிபொருட்கள், கனரக ஆயுதங்கள், வாகனங்கள் தொடர்பான விசாரணைகளையும் இந்த விசேட நடவடிக்கைப் பிரிவு ஆராயும்.
இவை தொடர்பாக தகவல்கள் தெரிந்திருப்பின் 0112-446174 என்ற பெக்ஸ் இலக்கத்துடன் தொடர்பு கொண்டு விபரங்களை அறியத்தருமாறும் பொலிஸ் தலைமையகம் கேட்டுக்கொண்டுள்ளது. சரியான தகவல்களை வழங்குபவர்களின் இரகசியத் தன்மை பாதுகாக்கப்படுவதுடன் தகவல் தருபவர்களுக்கும் சன்மானங்கள் வழங்கப்படும் என்றும் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply