பாகிஸ்தானில் இளம்பெண்ணை கற்பழித்து தூக்கில் தொங்கவிட்ட காதலன் கைது
பாகிஸ்தானில் பேச்சுத் திறனற்ற தம்பதியரின் மகளை திருமணம் செய்து கொள்வதாக ஆசைகாட்டி, அவரை கற்பழித்து, கழுத்தை நெறித்துக் கொன்று, மரத்தில் பிணமாக தொங்கவிட்ட வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர். பஞ்சாப் மாகாணத்தின் லய்யா மாவட்டத்தில் வசிக்கும் கண் பார்வையற்ற தம்பதியரின் மகளான அந்த இளம்பெண்ணை அதே பகுதியில் உள்ள காய்கறி கடையில் வேலை செய்து வந்த முகம்மது சபீக் என்ற வாலிபர் கடந்த 6 மாதமாக காதலித்து வந்தார்.சம்பவத்தன்று இரவு அந்த இளம்பெண்ணை தான் வேலை செய்யும் கடையின் மொட்டை மாடிக்கு அந்த வாலிபர் அழைத்துச் சென்றார். அங்கு தயாராக காத்திருந்த தனது நண்பர்களுடன் உல்லாசமாக இருக்கும்படி வற்புறுத்தினார். இதற்கு அந்த பெண் மறுக்கவே, மூவரும் சேர்ந்து அந்த பெண்ணை பலவந்தப்படுத்தி கற்பழித்தனர்.
பின்னர், அப்பகுதியில் உள்ள மரத்தில் பிணத்தை தொங்கவிட்ட சபீக், அங்கிருந்து தப்பியோடி விட்டார். அந்த பெண்ணுடன் சபீக்குக்கு இருந்த தொடர்பு பற்றியறிந்த போலீசார், குற்றவாளியை பிடித்து விசாரித்த போது உண்மையை ஒப்புக் கொண்டதையடுத்து, அவரை கைது செய்து வழக்குப்பதிவு செய்து, கூட்டாளிகள் இருவரை தேடி வருகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply