எந்தவொரு குழுவும் சட்டத்தை கையிலெடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் பாதுகாப்பு தரப்புக்கு ஜனாதிபதி பணிப்பு
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு நாடு ஸ்திரநிலையை அனுபவித்துவரும் சூழ்நிலையில் நாட்டில் ஏற்படுத்தப்பட்டி ருக்கும் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தைக் குழப்பும் வகையிலான முயற்சிகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் கவனம் செலுத்தியுள்ளார். எந்தவொரு குழுவினரும் சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொலிஸார் மற்றும் பாதுகாப்புப் பிரிவினருக்குப் பணிப்புரை வழங்கியிருப் பதுடன், அவ்வாறு செயற்படுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பணிப்புரை வழங்கியிருப்பதாக பதுளையிலிருந்து விசேட அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் ஜனாதிபதி அவர்கள் தெரிவித்துள்ளார்.
பிரிவினைவாதம் மற்றும் எல்.ரி.ரி.ஈயினரின் இனவாத செயற்பாடுகளைத் தோற்கடித்து நாடு ஸ்திரநிலை அடைந்திருக்கும் சூழலில் அதனைக் குழப்பும் வகையிலான முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் ஸ்திரத்தன்மையைக் குழப்ப முயற்சிக்கும் சில சர்வதேச சக்திகளின் செயற்பாடுகள் நாட்டின் தற்போதைய நிலைமையை மேலும் மோசமடையச் செய்துவிடும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது. நாட்டின் தற்போதைய நிலையை புரிந்து அனைத்து இனக்குழுக்களும் நட்புறவைக் கட்டியெழுப்புவதற்கும் இனங்களுக் கிடையில் சகவாழ்வை ஏற்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் ஜனாதிபதி அனைத்து மக்களிமுடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
எந்தவொரு குழுவினரும் சட்டத்தைக் கையில் எடுப்பதற்கு அனுமதிக்க வேண்டாம் என பொலிஸாருக்கும் பாதுகாப்புத் தரப்பினருக்கும் பணிப்புரை வழங்கியுள்ளேன். பொதுவான சட்டத்தை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பணித்துள்ளேன். சமூகங்களுக்கிடையில் இன அல்லது மதரீதியான பிரிவுகளை ஏற்படுத்த முயற்சிக்கும் எந்தவொரு நபர் அல்லது எந்தவொரு குழு மீதும் அதியுயர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுமாறும் ஜனாதிபதி சகல பாதுகாப்பு அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார்.
நாட்டிலுள்ள சகல இன மத குழுக்களையும் இணைத்துக்கொண்டு புதியதொரு இலங்கையைக் கட்டியெழுப் புவதே நம் அனைவரினதும் குறிக் கோளாகும். இதற்கு ஏனைய இன மதத்தவர்களின் கலாசாரங்களுக்கும் கருத்துக்களுக்கும் இடமளிக்கப்பட வேண்டும். வன்முறை என்பது பழங்குடியினரின் சின்னங்கள்.
ஒரு இனத்தை மற்றைய இனம் மதிப்பதன் ஊடாகவே இனங்களுக்கி டையிலான பெருமையை வெளிக்காட்ட முடியும். ஒன்றையொன்றைத் தாக்குவதன் ஊடாக அதனை வெளிக்காட்ட முடியாது. சிங்களவர், தமிழர், முஸ்லிம் என்ற வேறுபாடுகளின்றி தேசிய கீதத்தைப் பாடுவதைப் போன்று ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் போல நாம் அனைவரும் ஒன்றாகக் கைகோர்ப்போம் என்றும் ஜனாதிபதி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply