ஈராக்கில் போராளிகள் அதிரடி தாக்குதல்: 69 கைதிகள் படுகொலை
ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கும், ராணுவத்துக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இம்மாத தொடக்கத்தில் ஈராக்கின் மிகப் பெரிய 2–வது நகரமான மொசூல் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. அதை தொடர்ந்து திக்ரிக், கிர்குக் உள்ளிட்ட பல முக்கிய நகரங்களையும் அவர்கள் பிடித்துள்ளனர். தலைநகர் பாக்தாத்தை நோக்கி முன்னேறி வரும் அவர்கள் இன்று, போலீசார் கைதிகளை கொண்டு சென்றபோது திடீர் தாக்குதல் நடத்தினர். இதில், 69 கைதிகள் கொல்லப்பட்டனர். பாக்தாத்தின் தெற்குப் பகுதியில் உள்ள ஹஷிமியா பகுதியில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து போலீசாருக்கும் போராளிகளுக்குமிடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில், ஒரு போலீஸ்காரர், 8 போராளிகள் கொல்லப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.போராளிகள் உக்கிர தாக்குதலை ஆரம்பித்த ஜூன் மாதத்திற்குப் பிறகு இதுபோன்று கைதிகள் கொல்லப்படுவது இரண்டாவது முறையாகும். இதற்கு முன், கடந்த வாரம் பகுபா சிறையில் நடத்திய தாக்குதலில் 44 கைதிகள் கொல்லப்பட்டனர். அவர்களை பிரிவினைவாதிகள் கொன்றதாக பிரதமரின் பாதுகாப்பு செய்தி தொடர்பாளர் கூறினார். தப்பிச் செல்ல முயன்றதால் அவர்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றதாக மற்ற அதிகாரிகள் கூறுகின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply