அடிப்படைவாதத்தை தோற்கடித்து தேசத்தின் ஒற்றுமையை பலப்படுத்த ஒன்றுபடுங்கள் : ஜானதிபதி
எத்தகைய நிலையிலும் நாட்டின் சுயாதீனத்தைக் காட்டிக்கொடுக்க முடியாது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்தார். ஹம்பாந்தோட்டை ருஹுணு மாகம்புர துறைமுகத்திற்கான எரிபொருள் களஞ்சிய சாலையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வில் ஜனாதிபதி உரையாற்றினார். பிரிவினை வாதத்துக்கு இடமளிக்காமல் நாட்டின் சமாதானத்தையும் அபிவிருத்தியையும் பலப்படுத்த இலங்கையர் என்ற ரீதியில் அனைவரும் கைகோர்த்துச் செயற்படுவது முக்கியம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்:
ருஹுணு மாகம்புர துறைமுகம் வரலாற்றில் புதியதொரு அத்தியாயத்தினை ஆரம்பித்துள்ளது. எரிபொருள் களஞ்சி யசாலை மற்றும் எரிபொருள் நிலையம் என்பன துறைமுகத்துடன் இணைந்துள்ளன.
நாட்டிற்கு வழங்கிய வாக்குறுதியில் மேலும் ஒன்றை நாம் இதனூடாக நிறைவேற்றியுள்ளோம். இந்த அபிவிருத்திகளை எதிர்க்கட்சியினர் இங்கு வந்து பரீட்சித்துச் சென்றுள்ளமை குறித்து நான் மகிழ்ச்சியடைகிறேன். இன்னும் சில தினங்களுக்கு முன்பு அவர்கள் இங்கு வந்திருந்தால் இது பற்றி அறிக்கையொன்றை சமர்ப்பித்திருக்கவும் முடியும்.
நாம் ஏனைய நாடுகளின் முன்னே ற்றத்தைப் பார்த்து பொறாமைப்பட்ட காலங்களுண்டு. எமது அயல் நாடுகள் துறைமுகங்களை அமைத்து இலாபங்களை ஈட்டுவதுகண்டு நாம் அதிசயித்தோம். சில நாடுகள் மனித வளமின்றி, நீரின்றி, உணவுகளுமின்றி வேறு நாடுகளிலிருந்து அவற்றைப் பெற்று துறைமுகம் அமைத்து முன்னேறியுள்ளன.
எனினும் நாம் இவற்றிலெல்லாம் தன்னிறைவு கண்ட நாடு என்று பெரு மைப்பட முடியும். எம் கண் முன்னால் அங்குமிங்கும் பயணிக்கின்ற கப்பல்களை நாம் வரவழைக்க முடியுமா என பார்த்தோம்.
அப்படியானால் துறைமுகம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். அந்த கப்பல்களுக்கு எரிபொருள், நீர், உணவுத் தேவைகள் உள்ளதையும் நாம் அறிவோம். அதற்கான மத்திய நிலையமாக இப்போது ஹம்பாந்தோட்டை உருவாக்கப்பட்டுள்ளது. ஒருபோதும் துறைமுகம் அமைத்த உடனேயே அது முன்னேற்றமடைவதில்லை. கொழும்பு துறைமுகம் பல ஆண்டுகளுக்குப் பின்பே அதன் பிரதி பலனைப் பெற்றது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் வரலாறும் இதுதான்.
நாம் இந்த துறைமுகத்தை நிர்மாணித்து மூன்றே ஆண்டுகள்தான் ஆகின்றன. இப்போது இலாபமீட்டும் துறைமுகமாக இது மாறியுள்ளது. இலாபத்தில் விரைவிலேயே இது கொழும்பு துறைமுகத்தை எட்டிவிடும். இதனைப் பார்த்து நீச்சல் தடாகம் என்று விமர்சித்தார்கள். முடிந்தால் இப்போது வந்து நீந்திப்பார்க்கட்டும்.
மத்தள விமான நிலையத்தைப் பார்த்து அருட்காட்சியகம் என்று க:றினார்கள். எமது அபிவிருத்திகளை பொறாமை, குரோத மனப்பான்னையினால் பார்த்ததாலேயே இவ்வாறு விமர்சித்தார்கள்.
நாட்டில் எதிர்க்கட்சி அபிவிருத்திகளுக்கு பங்களிப்புச் செய்யும் கட்சியாக இருக்க வேண்டும். நாம் மக்களுக்காகவே இத்தகைய அபிவிருத்திகளை மேற்கொள்கின்றோம் இறுதியில் நன்மையடைவோர் அவர்களே.
ஏகாதிபத்திய வாதிகளுக்கு எதிராக நாம் செயற்பட்டதன் கைமாறே ரயில் பாதை மாத்தறையோடு நிறுத்தப்பட்டு அபிவிருத்திகள் முடக்கப்பட்டமை கல்வி கற்பிப்பதற்கு ஆசிரியர்கள் இல்லை. ஆஸ்பத்திரிகளில் தாதியர்கள் இல்லை. எனினும் இன்று எம் மக்கள் அனைத்தையும் அனுபவிக்கின்றனர். மக்கள் இப்போது வசதியாக வாழ அனைத்தையும் பெற்றுக்கொடுத்துள்ளோம் மக்கள் இதை மறந்துவிடக்கூடாது.
யுத்தம் முடிவுற்ற ஐந்து வருடத்துக்குள்தான் இத்தகைய மாற்றங்களை நாட்டில் எம்மால் ஏற்படுத்த முடிந்தது. அதனால் தான் எம்மால் பயமின்றி மக்கள் முன்செல்ல முடிகின்றது.
தேசிய ரீதியான சவால்களுக்கு மட்டுமின்றி சர்வதேச சவால்களுக்கும் நாம் பயமின்றி துணிச்சலுடன் முகம்கொடுத்தோம். உலக நாடுகளில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டபோது நாம் எமது பொருளாதாரத்தைப் பாதுகாத்தோம். உலகளவில் வங்கிகள் வீழ்ச்சியுற்ற போது நாம் வங்கிகளைப் பாதுகாத்தோம்.
ஒரு வங்கி வீழ்ச்சியுற நேர்ந்தபோது அடுத்த 24 மணித்தியாலயத்தில் நாம் அதை அரசாங்கத்துக்குச் சுவீகரித்தோம். அதனால் அது பாதுகாக்கப்பட்டது. தனியாருக்கு விற்கப்பட்ட அரச நிறுவனங்களை நாம் மீளப் பெற்றுள்ளோம். எமது பொருளாதாரக் கொள்கை தனியார் துறைக்கு எரிரானதல்ல. நாம் தனியார் துறையையும் பலப்படுத்தியுள்ளோம். அரச துறைபோன்றே தனியார்துறையையும் எதிர்காலத்தில் கட்டியெழுப்ப நாம் நடவடிக்கை எடுப்போம்.
எத்தகைய நிபந்தனைகளுக்கும் நாம் ஒருபோதும் அடிபணியவில்லை. அதனால் தான் ஜீ. எஸ். பி. பிளஸ் எமக்கு இல்லாமல் போனது. நாம் ஒரு போதும் எமது சுயாதீனத்தை காட்டிக்கொடுக்கத் தயாரில்லை. நாம் விவசாயிகளை ஊக்குவிக்கவும் மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் பெரும் செலவு செய்து வருகிறோம். சீர்குலைந்திருந்த அரச சேவையை நாம் மீண்டும் கட்டியெழுப்பு ஊழியர்களை 14 இலட்சமாக உயர்த்தியுள்ளோம். ஏகாதிபத்திய வாதிகளுக்கு தலை வணங்காமலே இத்தகைய செயற்பாடுகளை நாம் முன்னெத்துள்ளோம்.
எமக்கு சர்வதேசத்தில் சீனா, இந்தியா, ஜப்பான், கொரியா மற்றும் பல மேற்கத்தைய நாடுகளும் உதவி வருகின்றன. பிரிட்டன், ஐரோப்பிய நாடுகளும் எமக்கு உதவுகின்றன.
சில நாடுகள் மட்டும் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கூடாக அநாவசிய செயற்பாடுகளில் ஈடுபட்டுவருகின்றன. இந்த நாட்டின் சுயாதீனத்தை இல்லாதொழித்து வீழ்ச்சியுறச்செய்ய பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. சிங்களம், தமிழ், முஸ்லிம் என பிரிந்துநின்று எம்மால் நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. நாம் கைகோர்த்துச் செயற்படுவோம். நாம் ஒருவரை ஒருவர் மதிக்கப் பழகுவோம்.
அன்று தமிழ், சிங்களம், முஸ்லிம் என்று பார்க்காமல் பயங்கரவாதிகள் அனைவரையும் படுகொலை செய்தனர். சமய வழிபாடுகளுக்கு இடமளிக் கவில்லை.
யாழ்ப்பாணத்திலிருந்து 19,000 பேர் இரண்டு மணித்தியாலங்களில் துரத்தப் பட்டனர். அப்போது எவரும் ஹர்த்தால் நடத்தவில்லை. ஆர்ப்பாட்டமும் மேற்கொள்ளவில்லை. எனினும் இப்போது சிறுசிறு சம்பவங்களுக்காக பாரிய அளவில் ஹர்த்தால் செய்கின்றனர்.
நான் ஒருபோதும் எவருக்கும் இனமொன்றை நசுக்க இடமளிக் கமாட்டேன் ஒரு இனத்தை இன்னொரு இனம் மிதிக்கவோ, காட்டிக் கொடுக்கவோ ஒருபோதும் எமது அரசாங்கம் இடமளிக்கப்போவதில்லை.
பாதிப்புக்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள நான் பணிப்புரைவிடுத் துள்ளேன். இந்த சம்பவங்களின்போது இராணுவத்தைப் பயன்படுத்தவில்லை என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். ரதுபஸ்வெல சம்பவத்துக்கு இராணு வத்தை உபயோகித்த போது அதற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இங்கு படையினர் சம்பந்தமான பிரச்சினையல்ல. இப்போது அங்கு நிலைமை சுமுகமாகி இருதரப்பும் சமாதானமாகிவிட்டனர். எனினும் வதந்திகள் மிக மோசமாக பரப்ப ப்பட்டு வருகின்றன. இரு தரப்பிலும் உள்ள அடிப்படைவாதிகள் பிரிவினை வாதத்தை ஏற்படுத்தப் பார்க் கின்றனர்.
இதனை இரு தரப்பும் நிறுத்துவது முக்கியம். பிரிவினை வாதத்துக்கு எதிராக அரசாங்கம் மட்டுமன்றி பொது மக்களும் முன்வரவேண்டும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply