முஸ்லிம்களின் அயராத பங்களிப்பை மறந்து நாம் செயற்பட முடியாது சப். பல்கலைக்கழக வேந்தர் கும்புறுகமுவே வஜிரதேரர்
இந்நாட்டு முஸ்லிம்கள் நாட்டின் மேம்பாட்டுக்கும், அபிவிருத்திக்குமென ஆரம்ப காலம் முதல் பங்களிப்பு நல்கி வருகின்றார்கள். அப்பங்களி ப்புகளை நாமே மறந்து செயற்பட முடியாது என்று சப்ரகமுவ பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர தேரர் தெரிவித்தார். அமைதி, சமாதானம் நிறைந்த நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக சகலரும் ஒன்றுபட்டு உழைக்க முன்வர வேண்டும் எனவும் அவர் கூறினார்.இன ஐக்கியத்திற்கான தேசிய நிகழ்ச்சித் திட்டம் கொழும்பு கிங்ஸ்பேரி ஹோட்டலில் நேற்று முன்தினம் மாலையில் ஒழுங்கு செய்திருந்த செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சர்வதேச முஸ்லிம் அமைப்பின் இலங்கை ஆலோசகர் அப்துல் காதர், மஸ¤ர் மெளலானா, ஜனாதிபதியின் பெளத்த மத விவகார இணைப்பாளர் கலகம தம்ம ரன்ஸி தேரர், இலங்கை ஷரீஆ கவுன்ஸிலின் தலைவர் ஹஸ்புல்லா மெளலவி ஆகியோர் இச்செய்தியாளர் மாநாட்டில் பங்குபற்றினர்.
இச்செய்தியாளர் மாநாட்டில் பேராசிரியர் கும்புறுகமுவே வஜிர மகாநாயக்க தேரர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பேருவளை, தர்காநகர், அளுத்கம வெலிப்பன்ன சம்பவங்கள் சர்வதேசத்தின் கவனத்தை ஈர்த்து ள்ளன. இவ்வாறான சூழலில் இன, மத ஐக்கியமும், சமாதானமும் மிகவும் இன்றியமையாதது. இன, மத ஐக்கியமின்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது. தேசிய ஒற்றுமை பாதுகாக்கப்படா ததால் தான் நாடு 30 வருட காலப் பேரழிவுக்கு முகம் கொடுத்தது.
அப்படியான நிலைமை இனியொரு போதும் இந்நாட்டில் ஏற்பட நாம் இடமளிக்க முடியாது. பேருவளை, தர்கா நகர், அளுத்கம, வெலிப்பன்ன ஆகிய பிரதேசங்களில் ஏற்பட்ட சம்பவங்களால் அப்பாவியான சிங்கள, முஸ்லிம் மக்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள். தற்போது உருவாகியுள்ள நிலைமையால் நாட்டின் சில பிரதேசங்களில் அச்சமும் பீதியும், நம்பிக்கையீனமும் பரவுகின்றன. இந்த நிலைமை நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல. அதனால் இச்சவால்களை வெற்றிகொள்ள நாம் எல்லோரும் ஒன்றுபட்டுச் செயற்பட தயாராக வேண்டும்.
ஒவ்வொருவரும் அடுத்தவரின் இனத்தையும், மதத்தையும் மதிக்க வேண்டும். சட்டத்திற்கு முன்பாக சகலரும் சமமாகப் பார்க்கப்பட வேண்டும். நாட்டின் சட்டம் வீழ்ச்சி அடைந்தால் அது நாட்டுக்கே ஆபத்தாகிவிடும். அண் மைக்காலமாகச் சிலர் நாட்டின் சட்டத்தைக் கையில் எடுக்க முயற்சி செய்கின்றனர். இது ஒரு கலாசாரமாக வளர்ச்சி அடைய இடமளிக்கக் கூடாது. இந்நாட்டு முஸ்லிம்கள் நாட்டின் மேம்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும் ஆரம்ப காலம் முதல் பங்களிப்பு நல்கி வருகின்றார்கள்.
இவற்றை மறந்து நாம் செயற்பட முடியாது. அமைதியும், சமாதானமும் நிறைந்த நாடாக இலங்கையைக் கட்டடி யெழுப்புவோம். நாம் ஒன்றுபட்டு நீண்ட பயணம் மேற்கொள்ள வேண்டிய வர்கள், இது சிறு குழுவொன்றின் வேலையே. இதனையிட்டு எம் முஸ்லிம் சகோதரர்கள் கவலை அடையாதீர்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply