புறநகர் ரயில் இரண்டாம் வகுப்பு கட்டண உயர்வு வாபஸ்
80 கி.மீ., தொலைவு வரையிலான புறநகர் ரயில் இரண்டாம் வகுப்புக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டது, வாபஸ் பெறப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை இன்று ரயில்வே துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இரண்டாம் வகுப்பு புறநகர் ரயில் கட்டணங்கள் உயர்த்தப்படவில்லை என்று தெரிவித்துள்ளது. குறிப்பாக 80 கி.மீ. தொலைவு வரையிலான கட்டணங்களுக்கு மட்டுமே இது பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, புறநகர், புறநகர் அல்லாத அனைத்து ரயில்களுக்கும் 14.2 சதவீத கட்டண உயர்வை ரயில்வே அறிவித்திருந்தது. இதை அடுத்து பல்வேறு மட்டத்திலும் இருந்து எதிர்ப்பு கிளம்பியது.
இந்நிலையில், பிரதமர் தலையீட்டில், இரண்டாம் வகுப்பு ரயில் கட்டண உயர்வை மட்டும் கைவிடுவதாக ரயில்வே அமைச்சகம் அறிவுறுத்தியது.
இந்தக் கட்டண உயர்வு ரத்தால், தினமும் வேலை நிமித்தமாக பயணம் செய்யும் மும்பை, சென்னை, கோல்கத்தா மெட்ரோ நகரங்களின் ரயில் பயணிகள் பெரும் பயனடைவர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply