யாழ்ப்பாணத்தில் ரூ.120 கோடியில் கலாசார மையம் இந்தியா கட்டிக்கொடுக்கிறது

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளில் இந்தியா மறுகட்டமைப்பு திட்டங்களை உருவாக்கி வருகிறது. அதன்படி யாழ்ப்பாணத்தில் பொது நூலகம் அருகில் ரூ.120 கோடியில் ஒரு கலாசார மையத்தை இந்தியா 36 மாதங்களில் கட்டிக்கொடுக்க ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.இந்த மையத்தில் வடக்கு மாகாண, குறிப்பாக யாழ்ப்பாணத்தை சேர்ந்த மக்களை கலாசார அடிப்படையில் மீண்டும் இணைப்பதற்கு உதவும் வகையில் சமுதாய அடிப்படை வசதிகள் வழங்கப்படும். யாழ்ப்பாணத்தின் பழமையான, பாரம்பரிய கலாசாரங்களுக்கு புத்துயிர் ஊட்டுவதுடன், பயிற்சியும் அளிக்கப்படும். உள்ளூர் மட்டுமின்றி சர்வதேச கலாசார நிகழ்ச்சிகளை இங்கு மக்கள் கண்டுகளிக்கலாம். மேலும் கலாசார கல்வி மற்றும் பயிற்சி மையமாகவும் இது விளங்கும். இந்த தகவலை கொழும்பில் உள்ள இந்திய தூதர் தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply