அரச இரகசிய தகவல் சட்டத்தின் கீழ் மங்கள சமரவீர எம்.பி.மீது நடவடிக்கை
தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் விதத்தில் அரச தகவல்களை வெளியிடுவது பாரதூரமான குற்றம். அவ்வாறு தகவல்களை வெளியிடுபவர்களுக்கு எதிராக 1955ம் ஆண்டு 32ம் இலக்க அரச இரகசியத் தகவல் சட்ட (Official Secret Act) த்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்க முடியுமென பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன நேற்றுத் தெரிவித்தார். தேசிய புலனாய்வுத்துறையில் உள்ள மூன்று அதிகாரிகளின் பெயர்களை பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக பொலிஸ் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது என்றும் தெரிவித்தார்.
பாராளுமன்ற சிறப்புரிமைக்குள் உள்வாங்க ப்படுபவை பாராளுமன்ற சபைக்குள் தெரிவிக்கும் விடயங்கள் மாத்திரமே. மங்கள சமரவீர எம்.பி. ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போது இந்தப் பெயர்களை வெளியிட்டிருப்பது பாராளுமன்றத்திற்கு வெளியில் வேறு இடத்தில். இது தொடர்பான முறைப்பாடு பதியப்படாத நிலையிலும் பொலிஸாருக்கு சம்பவம் தொடர்பான பதிவுகள் கிடைத் துள்ளன. எனவே, அவரது கூற்றுகள் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த விசாரணைகளின் இறுதியில் மங்கள சமரவீர எம்.பி. ஏதாவது குற்றம் இழைத்திருக்கிறார் என அறியக்கிடைத்தால் அந்த அறிக்கை சட்டமா அதிபரிடம் சமர்ப்பித்து அவரது ஆலோசனை பெறப் பட்டு அதனடிப்படையில் பொலிஸார் நடவடிக்கை எடுப்பார்கள். தேசிய புலனாய்வு சேவையின் தலைவர் ஒருவர் உட்பட, மூவரின் பெயர்களை பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர நேற்று முன்தினம் 24ம் திகதி வெளியிட்டி ருந்தார்.
தேசிய புலனாய்வு சேவைப் பிரிவு என்பது நாட்டின் பாதுகாப்புக்காக அர் ப்பணிப்புடன் செயற்படும் ஒரு முக்கியமான பிரிவு. இதில் இருக்கும் அதிகாரிகள் மிகவும் இரகசியமாக தங்களது கடமைகளை செய்து கொண்டிருப்பவர்கள். நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் இடங்கள் தொடர்பாக சகல விதமான தகவல்களை இரகசியமாக சேகரிப்பது அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமையாகும்.
இவ்வாறான தகவல்களை சேகரிக்கும் போது அவர்கள் தாங்கள் யார் என்பதை வெளிக்காட்டிக் கொள்ள மாட்டார்கள். அவ்வாறு வெளிக்காட்டுவதால் அவர்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும்.
பாராளுமன்ற சிறப்புரிமைகளை பயன்படுத்தியோ இல்லாமலோ இவ் வாறான நபர்களின் பெயர்களை வெளி யிடுவது என்பது தேசத்துரோகமான செயல். தேசிய பாதுகாப்பை சீர்குலைக்கும் செயல். எனவே, 1955ம் ஆண்டு 32ம் இலக்க அரச இரகசியத் தகவல் சட்ட (Official Secret) த்தின் கீழ் இரகசியங்களை வெளியிடும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு ஏற்பாடுகள் உள்ளன. இதன்படி, மங்கள சமரவீர எம்.பி. இந்த தகவல்களை வெளியிட்டது தொடர்பாக மேற்குறிப்பிட்ட சட்டத்திற்கு அமைவாக நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
இதேவேளை மங்கள சமரவீர எம்.பியின் மேற்படி கூற்றுகள் தொடர்பாக பாதுகாப்பு படைப்பிரிவினரும் தங்களது கவலையைத் தெரிவித்துள்ளனர் என இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார். பெயர்களை வெளியிடுவதால் தேசிய பாதுகாப்புக்கு ஏற்படும் இழப்பு எண்ணிலடங்காதது. மிலேனியம் சிட்டி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் 21 பேரை இழந்ததை இந்த நாடு இன்னும் மறந்துவிடவில்லை.
மங்கள சமரவீர எம்.பி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் பெயரை வெளியிட்டதன் நோக்கம் என்ன? என்பது எமக்குத் தெரியாது. அவர்கள் சேவை செய்வது நாட்டின் பாதுகாப்பை முன்னிறுத்தியே சேவை செய்கின்றனர். அவர்கள் எவ் வேளையிலும் அரசியலை முன்னிறுத்தி சேவை செய்வதில்லை. புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தொடர்பாக அவ்வாறான ஒரு முறைப்பாடு இருப்பின் அத்துறை சார்ந்த பிரிவுக்கு முறைப்பாடு செய்யலாம். அதைவிடுத்து ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்படுத்தி முறைப்பாடு செய்வது ஏன்? ஏதாவது ஒரு விடயத்தை செய்வதற்கு ஒரு வரைமுறை இருக்கிறது.
உலகத்தில் உள்ள புலனாய்வுத் துறை யுடன் எமது புலனாய்வுத்துறையை ஒப்பிடும் போது எமது புலனாய்வுத்துறை முதலிடத்தில் இருக்கிறது. பயங்கரவாத ஒழிப்பின் போது உடல் ரீதியாக பாதுகாப்பு படையினர் அர்ப்பணிப்பு செய்தபோடு மனோ ரீதியாக இந்தப் புலனாய்வுத் துறையினர் செய்த சேவை எண்ணிலடங்காதவை என்றும் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply