ஹோண்டுராசை 0-3 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய சுவிட்சர்லாந்து

உலக கோப்பை கால்பந்து போட்டியின் இன்றைய ஆட்டத்தில் ஹோண்டுராஸ் அணியும் சுவிட்சர்லாந்து அணியும் மோதின. தொடக்கம் முதலே சுவிட்சர்லாந்து வீரர்களின் ஆதிக்கம் காணப்பட்டது. ஆட்டம் தொடங்கிய 3வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்தின் ஷாகிரி அடித்த பந்தை ஹோண்டுராஸ் கோல் கீப்பர் வல்லாடரஸ் லாவகமாக தடுத்தார். ஆனால் 6வது நிமிடத்தில் ஷாகிரி கோல் அடித்து சுவிஸ் அணியின் கோல் கணக்கை துவக்கினார். ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் தனக்கு கிடைத்த ப்ரீ கிக் வாய்ப்பை கோலாக மாற்ற தவறினார் ஷாகிரி. ஆட்டத்தின் 30வது நிமிடத்தில் ஷாகிரி மீண்டும் ஒரு கோல் அடித்து தங்கள் அணியின் கோல் கணக்கை 2 ஆக உயர்த்தினார். ஆட்டத்தின் 45வது நிமிடம் வரை வேறு கோல்கள் எதுவும் அடிக்கப்படாமல் இருந்த போது முதல் பாதி ஆட்டம் முடிவுக்கு வந்தது.

இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கப்பட்ட பின் ஆட்டத்தின் 52வது நிமிடத்தில் ஹோண்டுராசின் பெங்ஸ்டன் அடித்த ஷாட்டை சுவிஸ் அணியின் ரோட்ரிகஸ் கோல் விழாமல் தடுத்தார். ஆட்டத்தின் 66வது நிமிடத்தில் ஹோண்டுராசின் பாலாசியோசுக்கு மஞ்சள் அட்டை வழங்கப்பட்டது. ஆட்டத்தின் 71வது நிமிடத்தில் ஷாகிரி தனது மூன்றாவது கோலையும் அடித்து அசத்தினார். ஆட்டத்தின் 78வது நிமிடத்தில் ஹோண்டுராசின் நஜர் அடித்த பந்தை சுவிஸ் கோல் கீப்பர் பெங்காலியோ லாவகமாக பாயந்து தடுத்தார்.

இரு அணிகளும் மேற்கொண்டு கோல் எதுவும் அடிக்கப்படாத நிலையில் இரண்டாவது பாதி முடிவுக்கு வந்தது. இறுதியில் 0௩ என்ற கோல் கணக்கில் ஹோண்டுராசை சுவிட்சர்லாந்து வீழ்த்தியது. ஆட்டநாயகனாக ஷாகிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply