நாடுகளின் உள்விவகாரங்களில் வெளிநாடுகளின் தலையீட்டை அனுமதிக்கப்போவதில்லை : ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ
நாடுகளின் உள்விவகாரங்களில் வெளி நாடுகளின் தலையீட்டை அனுமதிக்கப்போவ தில்லை எனவும் சர்வதேச அரங்கில் மாலைதீவு தொடர்ச்சியாக இலங்கைக்கு ஆதரவு வழங்க தயாராகவுள்ளதாகவும் அந்நாட்டின் ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அப்துல் கையூம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் உறுதியளித்துள்ளார். மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கும் மாலைதீவு ஜனாதிபதிக்கு மிடையில் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தை யொன்று இடம்பெற்றுள்ளது.
மாலே நகரிலுள்ள அந்நாட்டின் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இப் பேச்சுவார்த்தையில் ஜனாதிபதியுடன் சென்ற இலங்கைத் தூதுக் குழுவினரும் பங்கேற்றனர். இதன் போதே மாலைதீவு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்:
இலங்கையும் மாலைதீவும் மிக நெருக்கமான உறவுகளைக் கொண்ட அயல்நாடுகள். இந்த வகையில் வெளிச் சக்திகளின் தலையீட்டை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. மாலைதீவு இலங்கைக்கு தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகிறது. சர்வதேச அரங்குகளில் எதிர்காலத்தில் தமது பூரண ஆதரவை வழங்கும். இலங்கையுடன் தோளோடு தோள் நின்று ஒத்துழைப்புடன் செயற்படவும் தயாராகவுள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
இரு நாட்டுத் தலைவர்களினதும் தனியான சந்திப்பையடுத்து இரு தரப்பினருக்கிடையிலுமான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதன் போது இலங்கை, மாலைதீவுக்கி டையிலான நெருங்கிய நட்புறவு, உள்ளக பயன்பாடுகள் தொடர்பில் மீளாய்வு இடம்பெற்றதுடன், இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவதிலும் வளர்த்துக் கொள்வதிலும் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்கள் பரிமாறப்பட்டன.
இதன்போது கருத்துத் தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி: எமது பிராந்தியம் சகிக்க முடியாத அளவு நெருக்கதல் களை எதிர்கொண்டுள்ளது. ஒன்றி ணைந்து செயற்படுவதன் மூலமே இதனைத் தடுக்க முடியும் எனவும் தெரிவித்தார்.
தமக்கு அளிக்கப்பட்ட மகத்தான வரவேற்புக்கு நன்றி தெரிவித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சர்வதேச அரங்கில் மாலைதீவு வழங்கிவரும் ஆதரவுக்கு நன்றி தெரிவித்தார்.
சார்க் அமைப்பை பலப்படுத்தும் நோக்கில் அங்கத்துவ நாடுகள் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவித்த மாலைதீவு ஜனாதிபதி, ஐ.நா வின் மனித உரிமை பேரவையில் அங்கத்துவம் பெற்றுக்கொள் வதற்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டு ள்ளார்.
மாலைதீவு சுதந்திரம் பெற்ற 50 ஆண்டு நிறைவு அடுத்த வருடத்தில் கொண்டாடப்படவுள்ளதாகவும் அந்நிகழ்வில் கலந்து கொள்ளுமாறும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு அழைப்பு விடுத்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply