ஈராக்கில் உள்ள புனிதத்தளங்களைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உறுதிமொழி

ஈராக்கில் தற்போது நடைபெற்றுவரும் ஷியா பிரிவு அரசுக்கு எதிரான சன்னி பிரிவு போராளிகளின் தாக்குதல் உச்சத்தை எட்டியுள்ளது. இந்தத் தாக்குதல்களில் பலியான பொதுமக்களின் எண்ணிக்கை 1300ஐத் தாண்டியிருக்கும் என்று கூறப்படுகின்றது. சிரியா மற்றும் ஈராக்கின் சில பகுதிகளை ஒருங்கிணைத்து தீவிர இஸ்லாமிய தேசத்தை உருவாக்க இந்த ஈராக்கிய மாநில மற்றும் லேவண்ட் போராளிகள் முயற்சித்து வருகின்றனர். இவர்களை பயங்கரவாதிகள் என்று வன்மையாகக் கண்டிக்கும் ஆயிரக்கணக்கான இந்திய முஸ்லிம் மக்கள் ஒருங்கிணைந்து அங்குள்ள புனிதத்தளங்களைக் காப்பாற்றுவதாக உறுதிமொழி எடுத்துள்ளனர். இதற்கெனத் தங்களின் புகைப்படங்கள், அடையாள ஆவணங்கள் இணைத்த ஈராக் செல்லுவதற்கான அனுமதி படிவங்களை அவர்கள் நிரப்பிக் கொடுத்துள்ளனர்.

புது டெல்லியில் இந்தத் திட்டத்தை செயல்படுத்திவரும் அஞ்சுமன் ஈ ஹைதேரி என்ற அமைப்பின் தலைவர்கள் அங்குள்ள ஈராக் தூதரகத்திற்கு அணிவகுத்து செல்லும் எண்ணத்தில் இருக்கின்றனர். ஷியா மதகுரு ஒருவரின் தலைமையின் கீழ் கூடும் இந்த தன்னார்வலர்கள் ஈராக்கில் உள்ள புனிதத்தளங்ககளைப் பாதுகாக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். கர்பாலா சாலையில் உள்ள இவர்கள் தலைமையகத்திலும் ‘இது இனப் பிரிவுவாத போரல்ல;ஈராக்கிகளுக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே நடைபெறும் போர்’ என்ற வாசகம் காணப்படுகின்றது.

ஜிஹாதி என்பவர்கள் கொலை செய்பவர்கள் அல்ல. பாதுகாப்பவர்கள் என்பதே அதன் அர்த்தமாகும் என்று இந்த அமைப்பின் மூத்த உறுப்பினரான சையது பிலால் ஹுசைன் அபிடி கூறுகின்றார். ஈராக் செல்லும் நாங்கள் அங்கு மனித சங்கிலி ஒன்றை அமைத்து சித்திரவதை செய்யப்படும் மக்களைக் காப்பாற்ற முடியும். தண்ணீர் சுமந்து, ரத்தம் அளித்து என்று எது வேண்டுமானாலும் செய்து புனிதத் தளங்களை காப்பாற்ற முயற்சி செய்வோம் என்று அவர் தெரிவித்தார்.

ஏற்கனவே 40 இந்தியர்கள் ஈராக்கில் பணயக் கைதிகளாக பிடித்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இருப்பிடம் இன்னும் வெளித்தெரியவில்லை. மேலும் திக்ரித்தில் 46 இந்திய நர்சுகள் நிராதரவாக இருக்கின்றனர். எனவே பாதுகாப்பு கருதி இந்திய அரசு இவர்களின் பயணத்திற்கு அனுமதி அளிக்காது என்று கூறப்படுகின்றது. இந்த நிலையில் தங்களின் சொந்த முயற்சியிலேயே இவர்கள் ஈராக் செல்லவேண்டும் என்றும் இந்த அமைப்பின் பொது செயலாளரான சையது பகதூர் அப்பாஸ் நக்வி குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply