மாலைதீவிலிருந்து ஜனாதிபதி நேற்று சீஷெல்ஸ் பயணம்

மாலைதீவிற்கான இரண்டு நாள் விஜயத்தை முடித்துக்கொண்ட ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்றைய தினம் சீஷெல்ஸ் நாட்டுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு ள்ளார். இரண்டு நாட்கள் சீஷெல்ஸில் தங்கியிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் அந்நாட்டின் ஜனாதிபதி ஜேம்ஸ் மிஷேல் அவர்களுடன் இருதரப்பு பேச்சுவார்த்தையை மேற் கொள்வார். அத்துடன் சீஷெல்ஸ் நாட்டின் விக்டோரியா நகரில் இலங்கைக்கான தூதுவராலயத்தையும் இவ் விஜயத்தின் போது ஜனாதிபதி அவர்கள் உத்தியோகபூர்வமாக திறந்த வைக்கவுள்ளார்.

ஜனாதிபதியுடன் அமைச்சர்கள் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ், எஸ். பி. திசாநாயக்க, பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏ, எச். எம். அஸ்வர், சஜின் வாஸ் குணவர்தன, உதித் லொக்குபண்டார. லொஹான் ரத்வத்த. ரஞ்சித் டீ சொய்சா, தேனுக விதான கமகே, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ஷெணுகா செனவிரத்ன ஆகியோரும் இவ் விஜயத்தில் இணைந்து கொண்டுள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply