ஈராக் வான்வெளியில் வட்டமிடும் அமெரிக்க ஆளில்லா விமானங்கள்
ஈராக்கில் வாழும் இரு முக்கிய பிரிவினரான சன்னி- ஷியா இனத்தவரிடையே நிலவி வரும் உள்நாட்டு மோதல்கள் உச்சகட்டத்தை எட்டியுள்ளன. நாட்டின் சில முக்கிய நகரங்களை கைப்பற்றியுள்ள போராளிகளிடமிருந்து அவற்றை மீடக அரசுப் படைகள் மும்முரமாக போராடி வருகின்றன. குறிப்பாக, முன்னாள் அதிபர் சதாம் உசேனின் சொந்த ஊரான திக்ரித் நகரை மீண்டும் தங்கள் வசப்படுத்த போராளிகளுடன் ஆக்ரோஷமாக தாக்குதல் நடத்திக் கொண்டுள்ளன.
ஈராக் விவகாரத்தில் அமெரிக்கா நேரடியாக தலையிடாது. தேவைப்பட்டால் அதிகபட்சமாக ராணுவ ஆலோசகர்களை மட்டும் அனுப்புவோம் என்று அந்நாட்டின் அதிபர் பராக் ஒபாமா அறிவித்திருந்தார். தற்போது 180 அமெரிக்க ராணுவ வீரர்கள் ஈராக் வந்து சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முதல் ஈராக் வான்வெளியில் அமெரிக்க ஆளில்லா விமானங்கள் வட்டமிட்டு வருகின்றன. அங்குள்ள அமெரிக்க வீரர்களையும், தூதர்களையும் தேவை ஏற்பட்டால் பாதுகாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஆனால், சன்னி மற்றும் ஐ.எஸ்.ஐ.எல். போராளிகள் மீது இந்த ஆளில்லா விமானங்கள் எவ்வித தாக்குதலும் நடத்தாது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply