ஆசிய நாடுகள் ஒன்றிணைவதுடன் தத்தமது நாடுகளை பலப்படுத்தி செயற்பட வேண்டிய காலம் வந்துவிட்டது : ஜனாதிபதி

உலகிலுள்ள பலம்வாய்ந்த வல்லரசு சக்திகளை நம்பியிருந்த அபிவிருத்தியடைந்துவரும் நாடுகள் தொடர்ச்சியாக ஏமாற்றப்பட்டு வருவது உணரப்பட்டுள்ளது. தமது தேவைகளுக்கு முக்கிய இடம் கொடுத்துச் செயற்படுவதிலேயே அபிவிருத்தியடைந்த மேலைத்தேய சக்திகள் குறியாக உள்ளன. ஆசியப் பிராந் தியத்தில் அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் எதிர்பார்த்த எவற்றையும் இச்சக்திகள் நிறைவேற்றத் தயா ராக இல்லாத நிலையே காணப் படுகிறது. மாலைதீவில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்துரையாடிய அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி மாமூன் அப்துல் கையும் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார். சார்க் நாடுகளின் தலைவராகவும், பொதுநலவாய நாடுகளின் தலைவராகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இருந்து வருவதனால் ஆசியா வில் பலம் மிக்க நாடுக ளைக் கட்டியெழுப்பும் கோரிக்கையைத் தான் விடுப்பதாகவும் அப்துல் கையும் தெரிவித்துள்ளார்.

இதற்கு ஆசிய மற்றும் ஆபிரிக்கக் கண்டத்திலுள்ள நாடுகள் பேதங்களை மறந்து ஒன்றிணைந்து செயற்பட்டு தமக்குள் பலம் வாய்ந்த வல்லரசு நாடுகளை உருவாக்கிக் கொள்ள வேண்டும். உலகின் வல்லரசு சக்திகளால் அபிவிருத்தி கண்டு வரும் ஆசிய, ஆபிரிக்க நாடுகள் பல தொடர்ந்தும் ஏமாற்றப்பட்டு வருவதற்கு இதுவே சரியான தீர்வாக அமையும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply