புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சகல எம்பிக்களிடம் வேண்டுகோள்

அரசினதும், இராணுவத்தினதும் புலனாய்வு விபரங்களையும், உணர்ச்சிபூர்வமான புலனாய்வு விடயங்களையும் வெளியிடுவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு சகல பாராளுமன்ற உறுப்பினர்களையும் பாதுகாப்பு அமைச்சின் ஊடக நிலையப் பணிப்பாளரும், பாதுகாப்பு பேச்சாளருமான பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கேட்டுள்ளார். நாட்டின் பாதுகாப்பைக் கருதி இந்த கோரிக்கை விடுக்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். சமூக வலைத் தளங்களின் ஊடாக ( Facebook, twitter) இன, மத வெறுப்புணர்வுகளை வளர்க்கும் வகையில் செயற்படுவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை மேற்கொள்ளுமாறு பாதுகாப்புச் செயலர் கோதாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அதிகாரிகளைப் பணித்துள்ளனர். சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி இன, மத வன்முறைகளை மேற்கொள் வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறும் பாதுகாப்புச் செயலர் சட்டம், ஒழுங்கு அமைச்சுக்கு உத்தரவிட்டுள்ளா ரென்றும் பிரிகேடிய வணிகசூரிய தெரிவித்தார்.

ஒரு எதிர்க்கட்சி எம். பி யின் இரகசி யமான முயற்சி பற்றி பொதுமக்களுக்கு நாம் தெரியப்படுத்தினோம். மிகவும் கஷ்டப்பட்டு பெற்ற சமாதானத்துக்கும் தேசிய பாதுகாப்புக்கும் இது அச்சுறுத்தலாக அமையும். முழு நாட்டின் பாதுகாப்பின் மீதே இது செய்யப்பட்டது. இலங்கை இராணுவ சார்பில் இது செய்யப் படவில்லை என்றும் அவர் விபரித்தார்.

சம்பந்தப்பட்ட தரப்பினரால் இவ்விடயமாக மேற்கொள்ளப்பட்ட முயற்சி தொடர்பாக தெரிவித்ததன் பின்னரே இவ்வாறு எம். பி. மார்களிடம் புலனாய்வு தகவல்களை வெளியிடுவதை தவிர்த்துகொள்ளுமாறு கேட்டோம் என்றும் பிரிகேடியர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply