ஐரோப்பிய யூனியன் தேர்தலில் பிரிட்டன் பிரதமர் தோல்வி

ஐரோப்பிய யூனியன் தலைவருக்கான தேர்தலில் போட்டியிட்ட பிரிட்டன் பிரதமர் டேவிட் கெமரூன் படுதோல்வி அடைந்து ள்ளார். 28 நாடுகள் அங்கம் வகிக்கும் ஐரோ ப்பிய யூனியனின் டேவிட் கெமரூனுக்கு ஆதரவாக 2 வாக்குகளே கிடைத்தன. இவரை எதிர்த்து போட்டியிட்ட சுவிடன் சார்பான வேட்பாளர் கிளவூட் ஜங்கருக்கு 26 வாக்குகள் கிடைத்து ஐரோப்பியூனியனின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரிட்டன் பிரதமரின் இத்தோல்வியானது அவரது உள்நாட்டு அரசியலிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்து டேவிட் கெமரூன் தெரிவித்துள்ளதாவது:- இது எனது கடைசி நிலைப்பாடல்ல ஐரோப்பிய யூனியனில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கான எனது முயற்சிகள் தொடரும். தற்போது இந்த அமைப்பு க்குள்ள அதிகாரங்கள் பாராளுமன்ற அதிகாரங் களையும் விஞ்சியதாகவுள்ளது.

பிரிட்டனின் அங்கத்துவம் தொடர்பாக அடுத்த பொதுத் தேர்தலுக்குமுன் பிரிட்டனில் சர்வஜன வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றார். இத் தேர்தல் குறித்து சுவிடன் பிரதமர். ஐரோப்பிய யூனியன் ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட ரீதியில் நெருக்கமாக செயற்படாது. இது ஒரு தனி அமைப்பு என்றார்.

ஜேர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கல் இது பற்றிக் கூறுகையில் ஐரோப்பிய யூனியனில் பிரிட்டன் கொண்டுள்ள அக்கறைகளை தான் வெளியிட யிருந்ததாகத் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply