பாலியல் துஷ்பிரயோகம் மலேசிய ராஜதந்திரி மீது வழக்கு

நியூசிலாந்தில் பாலியல் துஷ்பிரயோகச் செயலில் ஈடுபட்டார் எனும் குற்றச்சாட்டுக்கு மலேசிய ராஜந்தந்திரி ஒருவர் உள்ளாகியுள்ளார். அவர் மீது பாலியல் வன்செயல் குறித்த ஒரு வழக்கு நியூசிலாந்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று மலேசிய வெளியுறவு அமைச்சகம் ஒப்புக் கொண்டுள்ளது. நியூசிலாந்து தலைநகர் வெலிங்டனிலுள்ள மலேசிய தூதரகத்தில் இராணுவ அதிகாரியாக இருந்த, மொஹமத் ரிசால்மான் பின் இஸ்மாயில், ராஜந்திர ரீதியில் வழக்குகளை எதிர்கொள்வதிலிருந்து உள்ள விலக்கைப் பயன்படுத்திக் கொண்டு நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

வழக்கை எதிர்கொள்ளும் முகமாக அவரை மீண்டும் நியூசிலாந்துக்கு அனுப்பி வைக்கும்படி விடுக்கப்பட்ட கோரிக்கையை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று நியூசிலாந்தின் பிரதமர் ஜான் கீ தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை மறுத்துள்ள மலேசியா, நியூசிலாந்தின் அனுமதியுடனேய அவர் திருப்பி அழைப்பட்டார் என்று கூறுகிறது.

எனினும் அவரது நடத்தை குறித்து விசாரிக்கப்படும் என்று மலேசியா தெரிவித்துள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply