அமெரிக்காவின் உளவு தகவல்: இங்கிலாந்து விமான நிலையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு

சிரியாவில் உள்ள அல்கொய்தா ஆதரவு நுஸ்ரா முன்னணி மற்றும் ஏமன் அல்கொய்தா தீவிரவாதிகள், தற்போதைய விமான நிலையங்களின் பரிசோதனையில் சிக்காத வகையில் அதிநவீன வெடிகுண்டுகளை உருவாக்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு செல்லுகிற விமானங்களில் இத்தகைய நவீன வெடிகுண்டுகளை வைத்து தீவிரவாதிகள் நாச வேலையில் ஈடுபடக்கூடும் என்று தெரிகிறது.

இது தொடர்பான உளவுதகவல்களால் உஷார் அடைந்த அமெரிக்கா, தனது நேச நாடான இங்கிலாந்து நாட்டையும் உஷார்படுத்தி உள்ளது. இதையடுத்து இங்கிலாந்தில் முக்கிய விமான நிலையங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

குறிப்பாக உலகின் 3-வது பரபரப்பான விமான நிலையமான ஹீத்ரு விமான நிலையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply