சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயம் இராஜதந்திர உறவுகளின் மைல்கல்; முதலீடுகளை அதிகரிக்க வாய்ப்பு

சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயமா னது இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மைல் கல்லாக அமையுமென சீனாவின் துணை பிரதமர் தெரிவித்துள்ளார். சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். சீன வர்த்தக அமைச்சின் அழைப்பையேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வர்த்தகத்துறை விசேட பிரதிநிதியாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ சீனாவுக்குச் சென்றுள்ளார். கடந்த ஜூன் 29 முதல் இம்மாதம் 6ஆம் திகதிவரை சீனாவில் தங்கியிருந்து பல்வேறு தரப்பினருடன் அவர் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். அமைச்சர் பசில் ராஜபக்ஷ கடந்த 2ஆம் திகதி சீனாவின் துணை பிரதமர் ஜீ ஜின்பிங்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார். இரு நாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் குறித்து இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களையும் சீன துணை பிரதமர் இதன்போது தெரிவித்திருந்தார்.

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான சிறந்த தொடர்பாடல்கள் இரு நாட்டு உறவுகளை மற்றுமொரு படி உயர்த்தியிருப்பதாகவும், சீன ஜனாதிபதியின் இலங்கை விஜயமானது இரு நாட்டுக்குமிடையிலான இராஜதந்திர உறவுகளுக்கு மைல் கல்லாக அமையும் என்றும் சீன துணைப் பிரதமர் சுட்டிக் காட்டினார்.

இரு நாட்டு உறவுகளையும் பலப்படுத்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பங்களிப்புச் செலுத்தி வருகிறார். அது மட்டுமன்றி இலங்கை வரவிருக்கும் சீன ஜனாதிபதியை வரவேற்பதற்கு இலங்கை அரசாங்கமும், மக்களும் காத்திருப்பதாகவும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ இச்சந்திப்பில் தெரிவித்தார்.

பொருளதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சீன வர்த்தகத்துறை அமைச்சர் காஓ ஹ¥செங்கை சந்தித்து இரு நாட்டு வர்த்தக உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இரு நாட்டுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கையை துரிதப்படுத்துவது குறித்து இச்சந்திப்பில் விரிவாகக் கலந்து ரையாடப்பட்டுள்ளது.

இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத் தைக் கட்டியெழுப்புவதற்கு முன்னெடுக்கப் படும் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் உள்ளிட்ட அபிவிருத்தி செயற்பாடுகள் தொடர்பாக அமைச்சர் பசில் ராஜபக்ஷ, சீன அமைச்சருக்குத் தெளிவுபடுத்தி யிருந்தார்.

இலங்கையின் அபிவிருத்தி செயற்பாடு களில் பாரிய முதலீடுகளைச் செய்திருக்கும் ஒரே நாடு சீனா என்றும், இந்த முதலீடுகளுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் அமைச்சர் இச்சந்திப்பில் சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் சுற்றுலாத்துறை அபிவிருத்தி கண்டுள்ளதுடன் சீனாவிலிருந்து இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 140 வீதத்தால் அதிகரித் திருப்பதாவும் இச்சந்திப்பில் தெரிவிக் கப்பட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply