பொது பல சேனா ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு அல்ல எம்மை அழிக்க நினைப்பது பௌத்த மக்களை அழிப்பதற்கு சமமாகும்
பொதுபல சேனா என்பது வெறுமனே ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு அல்ல. பொதுபலசேனா என்பது நாட்டில் உள்ள அனைத்து பெளத்த இனத்தையும் சிங்கள மக்களையும் கொண்ட அமைப்பு. எம்மை அழிக்க நினைப்பது பெளத்த மக்களை அழிப்பதற்கு சமமாகும். இதை அனைத்து தரப்பினரும் உணர்ந்து கொள்ள வேண்டும் என்று பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார். ஒரு கிராமத்தில் ஏற்பட்ட சிறிய சண்டை இன்று சர்வதேச மட்டத்தில் கொண்டு செல்லப்பட்டுவிட்டது. அளுத்கம சம்பவம் ஏற்பட்டதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளே காரணம். சிறிய பிரச்சினையாக ஆரம்பித்த விடயம் இறுதியில் இரு இனங்களுக்கிடையிலான கலவரமாக மாற்றப்பட்டுவிட்டது. நடந்த சம்பவம் ஒரு சிறிய சம்பவம். அதை பெரிதுபடுத்தி நாட்டில் குழப்பதை ஏற்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டுமன்றி இந்தப் பிரச்சினைக்கு சம்பந்தம் இல்லாத எம்மீது இறுதியில் குற்றம் சுமத்திவிட்டன.
இந்த இனக்கலவரத்திற்கு நாம்தான் காரணம். அவ்வாறு பொதுபலசேனா அமைப்பினர்தான் காரணம் என்றால் அதற்காக எம்மைக் கைது செய்து சட்ட நடவடிக்கைகள் எடுங்கள். இப்போது ஆளும் தரப்பினரும் எதிர்க்கட்சி யினரும் பொது பலசேனா அமைப்பினரையே குற்றம் சுமத்தி வருகின்றனர். இது வேடிக்கையாகவும் எமக்கு வேதனையாகவும் உள்ளது. உண்மையிலேயே இந்த சம்பவம் ஏன் ஏற்பட்டது என்பதை எவரும் கேட்கவில்லை.
நாம் கடந்த காலங்களில் தொடர்ச்சியாக தெரிவித்தோம். நாட்டில் முஸ்லிம் மதவாதிகளின் தீவிரவாத செயற்பாடுகள் காணப்படுகின்றது என அதை எவரும் கண்டுகொள்ளவில்லை. முஸ்லிம் அமைச்சர்களும் அமைப்புகளும் பேருவளை, தர்காநகரை அமைதியான நகரமாகவே தொடர்ந்தும் சித்தரித்தனர். ஆனால் தர்காநகர் என்பது தீவிரவாதத்தின் மையபூமியாகும்.
நாட்டில் இன்று 30 பெளத்த அமைப்புக்கள் உள்ளன. பெரும்பான்மை சமூகத்தின் எண்ணிக்கையில் இது மிகவும் குறைந்தளவே.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply