மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சா?

பொதுபலசேனா அமைப்பிற்கும் தனக்கும் தொடர்பு இருப்பதை எவ ராவது நிரூபித்தால் தான் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் பதவி யிலிருந்து விலகிக் கொள்வதாக திரு. கோட்டாபய ராஜபக்ஷ பகிரங்கமாக அறிவித்திருக்கிறார். அதேபோன்று இக்கருத்தையொட்டியதாக பாதுகாப்பு அமைச்சிற்கும் அந்த அமைப்பிற்கும் எந்தவிதமான தொடர்புமே கிடை யாது என இராணுவப் பேச்சாளர் ருவன் வணிகசூரியவும் திட்டவட்ட மாகத் தெரிவித்துள்ளார். அரசியலுக்காக எதிர்க்கட்சியினரும், வெளிநாட்டு நிதிகளுக்காக சில பொது அமைப்புக்களும் தமக்குச் சார்பான ஊடகங்களில் அண்மைக் காலமாக இக்கருத்தை தெரிவித்து வருகின்றன. இப்பொய்க் கருத்து மூல மாக பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளருக்கு அபகீர்த்தியை ஏற்படுத்துவதே இவர்களது நோக்கமாகும். இந்தப் பொய் யான கருத்துக்குப் பதிலளிக்கும் வகையிலேயே இவ்விருவரும் தமது மறுப்பைத் தெரிவித்திருக்கிறார்கள்.

குறிப்பாக சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்களில் இக்கருத்தானது மிகவும் மிகைப்படுத்தப்பட்டு வெளியாகியது. பொதுபல சேனா அமைப்பு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரது கட்டுப்பாட்டிலேயே இயங்குவது போலவும், பாதுகாப்பு அமைச்சிலிருந்தே இந்த அமைப்பின் செயற் பாடுகளுக்கு நிதி வழங்கப்படுவது போலவும் கற்பனையில் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்காவிடின் அவர் களது கற்பனை மேலும் பல வடிவங்களில் வெளியாகும் என்பதனா லேயே திரு. கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகும் இந்தச் சவாலை பகிரங்கமாகவே விட்டார்.

இப்போது ஆதாரமில்லாது அறிக்கை விட்டவர்களும், வாய்க்கு வந்த வாறு உரையாற்றியவர்களும் மெளனமாகி விட்டனர். பொதுபல சேனா என்பது நாட்டிலுள்ள நூற்றுக்கணக்கான சமயம் சார்ந்த அமைப்புக்களுள் ஒன்று. அதன் கொள்கைகள் சற்றுத் தீவிரமாக இருப்பினும் அது வன் முறைகளில் ஈடுபட்டமைக்கான வலுவான ஆதாரங்கள் இல்லை. பெளத்த தர்மத்தையும், பெளத்த மதத்தையும், பெளத்தர்களையும் கட்டிக் காப்பாற்றும் நோக்கில் இந்த அமைப்பு இயங்கி வருவதாகவே அந்த அமைப்புக் கூறுகிறது.

இந்த அமைப்பு போன்று பல சமயம் சார்ந்த அமைப்புக்கள் உள்ளன. அவை ஒவ்வொன்றும் தத்தமது குறிக்கோள்களுக்காக இயங்கி வரு கின்றன. அவை வன்முறைகளில் ஈடுபடாத சமய விழிப்புத் தொடர்பாக வே அமைந்துள்ளன. இந்நிலையில் பொதுபல சேனா அமைப்பை மட்டும் தடை செய்யுமாறு எவராலும் கோரிக்கைவிட முடியாது. ஏனெனில் அந்த அமைப்பு இந்நாட்டில் பெரும்பான்மையாக வாழும் பெளத்தர்களையும், பெளத்த மதத்தையும் சார்ந்த ஒன்றாக உள்ளது. அத்துடன் இந்த அமைப்பின் உறுப்பினர்கள் பெளத்த மதத் துறவிகளாகவும் இருந்து வருகின்றனர்.

இந்நாட்டில் விடுதலைப் புலிகள் அமைப்பைத் தவிர எந்தவொரு அமைப்பும் பயங்கரவாதச் செயற்பாடுகளில் ஈடுபட்டதில்லை. அதற்கான ஆதாரங்கள் எவையும் இல்லையென பாதுகாப்புத் தரப்பினரின் புலனா ய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. சிலர் முஸ்லிம் தீவிரவாதக் குழுக்கள் உள்ளன எனக் கூறிவரினும் அதுவும் ஆதாரமற்ற ஒன்றே. பேரு வளையில் முஸ்லிம் தீவிரவாதக் குழுவிற்கு பயிற்சியளிக்கப்படுகின்றது. கிழக்கில் ஜிஹாத் எனும் ஆயுதக் குழு உள்ளது என்றெல்லாம் அறிக்கைகளை விடுவோர் எம் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றனர்.

ஆனால் பாதுகாப்புப் பிரிவினரின் புலனாய்வுத் தகவல்கள் இதனை முற்றாக நிராகரித்த நிலையே காணப்படுகின்றது. உயிரைத் துச்சமாக எண்ணி நாட்டின் பாதுகாப்பிற்காகப் பணியாற்றும் புலனாய்வுப் பிரிவி னரின் சேவை, அரசியலுக்காக குளுரூட்டிய அறையிலிருந்து அறிக்கை விடுவோருக்குத் தெரியவாய்ப்பில்லை. அதிலும் இன்று ஊடகங்களை மட்டுமல்லாது சமூகவலைத் தளங்களையும் இத்தகைய ஈனச் செயலுக்காகத் தவறாகப் பயன்படுத்திவரும் இன மற்றும் மத வாதிகளுக்கு தமது தாய் நாட்டை விடவும் இனமும் மதமுமே மேன்மையானதாகி விட்டது. இது ஆரோக்கியமானதல்ல.

அதனால்தான் இதற்கு முற்றுப்புள்ளி வைக்க பாதுகாப்பு அமைச்சு சமூக வலைத்தளங்களில் இன, மத குரோதங்களைத் தூண்டுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கத் தீர்மானித்தது. இதனைக் கூடச் சிலர் அடக்கு முறை என்றும், ஊடக சுதந்திரத்தைப் பறித்தெடுக்கும் முயற்சி என்றும் விமர்சிக்கத் தலைப்பட்டனர். ஆனால் நாட்டிலுள்ள தொண்ணூற்று ஒன்பது சதவீதமான மக்கள் இதனை வரவேற்றுள்ளனர்.

அண்மையில் பேருவளை, அளுத்கம போன்ற பிரதேசங் களில் இடம்பெற்ற சம்பவங்களை ஊடகங்களும், சமூக வலைத்தளங்களும் மிகைப்படுத்தியிருந்தமையை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. அவரவர் தமக்குச் சார்பான கருத்துக்களை இவற்றில் திணித் தனர். உண்மையை ஆராயாது செவி வழி கேட்பவைகளை தரவேற்றி உலகிலிருப்போரை உசுப்பிவிட்ட தன்மை அங்கு காணப்பட்டது. உண்மைச் சம்பவத்தை கூறுவதில் தவறில்லை. ஆனால் மிகைப்படுத்த லும் கட்டுக்கதைகளும், வதந்திகளும் நிச்சயமாக ஏற்றுக் கொள்ள முடி யாதவை.

எது எவ்வாறிருப்பினும் நாட்டின் இறைமைக்கும் நாட்டு மக்களின் ஒற்றுமைக்கும், இன மற்றும் மத நல்லுறவிற்கும் குந்தகத்தை ஏற்படுத்து வோர் தண்டிக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்திற்கு இடமில்லை. அத்துடன் சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் எத்தகைய உயர் பதவிகளில் இருந்தாலும் விசாரிக்கப்பட வேண்டும். இதனையே பாதுகாப்பு அமை ச்சின் செயலாளரது அண்மைய அறிவுறுத்தல் தெளிவாகக் கோடிட்டுக் காட்டுகிறது.

இதனடிப்படையிலேயே பொது பலசேனாவின் பொதுச் செயலாளர் கூட பொலிஸாரினால் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். ஆனால் அவர் தான் சார்ந்த பெளத்த மத வளர்ச்சிக்குப் பாடுபடுவதாகவும், மத மாற்ற விவ காரத்தை எதிர்ப்பதாகவும் கூறியிருக்கிறார். அவர் மீதோ அவரது அமைப்பின் மீதோ இதுவரை குற்றச்சாட்டுக்கள் எதுவும் பதிவாகவில்லை. அவ்வாறு குற்றமிழைத்திருப்பின் பாதுகாப்புச் செயலாளர் பணிப்புரை விடுத்தது போல அவர் மீதும் விசாரணை இடம்பெற்று சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வெறுமனே ஊடக அறிக்கையையும், ஊகங்களையும் வைத்து எவரையும் கைது செய்ய முடியாது. நாட்டிலுள்ள சட்டத்தில் அதற்கு மிடமில்லை. அவ்வாறு செய்வதாயின் பாதுகாப்புச் செயலாளர் தெரிவித்தி ருப்பது போன்று நாட்டிலுள்ள பலரைக் கைது செய்திருக்க வேண்டும். குறிப்பாக மன்னார் ஆயர் வணக்கத்திற்குரிய இராயப்பு ஜோசப் ஆண்டகை, அரசியல்வாதி அஸாத் சாலி மற்றும் மங்கள சமரவீர உட்பட பலரைக் கைது செய்ய வேண்டும்.

எனவே, தற்போது நாடு சர்வதேச ரீதியில் எதிர்நோக்கியிருக்கும் பிரச்சினைகளைக் கருத்திற் கொண்டு எமது தாய் நாட்டிற்குள் இன, மத, கட்சி வேறுபாடுகளை மறந்து நாம் இலங்கையர் என ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். சர்வதேச சூழ்ச்சிகள் எம்மை நெருக்க நாம் எமக் குள்ளே முரண்பட்டுக் கொண்டு சர்வதேசத்திடம் நாட்டைக் காட்டிக் கொடுக்க முனைவது தாய் நாட்டிற்குச் செய்யும் துரோகமாகும்.

நாட்டில் நிலவிய முப்பது வருட கால பயங்கரவாத யுத்தத்தை முடி விற்குக் கொண்டு வந்து நாட்டு மக்கள் நிம்மதிப் பெருமூச்சுடன் வாழ வழிசமைத்துத் தந்த ஜனாதிபதிக்கு நன்றி கூறும் அதேவேளை அவருக்குப் பக்கபலமாக நின்று பயங்கரவாதத் தாக்குதல் ஒன்றிலிருந்து மயிரிழையில் உயிர் தப்பிய பாதுகாப்புச் செயலாளரையும் நாம் கெளர வப்படுத்த வேண்டும். அவர் மீது காழ்ப்புணர்வு கொண்ட சிலரால் கட்டவிழ்த்தவிடப்பட்டுள்ள கட்டுக்கதைகளுக்கு நாம் சோரம் போய்விடக் கூடாது. அது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவதாகவே அமையும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply