அமெரிக்காவும், இஸ்ரேலும் நல்லவன்-கெட்டவனாக நடிக்கின்றன: ஈரான் தலைவர்

அணு ஆயுத விவகாரத்தில் தங்கள் நாட்டை மிரட்டும் விஷயத்தில் அமெரிக்கா நல்லவன் போலவும், இஸ்ரேல் கெட்டவன் போலவும் நடிப்பதாக ஈரான் நாட்டின் முக்கிய தலைவரான அயாதுல்லா அலி காமேனி கூறியுள்ளார். அந்நாட்டில் ரம்ஜான் திருவிழாவை ஒட்டி நடத்தப்பட்ட இப்தார் விருந்தில் கலந்து கொண்ட அவர், இஸ்ரேல் தங்கள் நாட்டை தாக்க முயல்வது போலவும், அமெரிக்கா அதை தடுப்பது போலவும் மிகப்பெரிய நாடகத்தை நடித்து வருவதாக கூறியுள்ளார். ஆனால் உண்மை என்னவென்றால் தாக்குதல் நடத்துவதற்கு மிகப்பெரும் செலவாகும் என்பதாலேயே அவர்கள் தங்களை தாக்கவில்லை என்றார் அவர். அதனால் தான் வேறுவழியில்லாமல் அந்நாடுகள் பொருளாதார தடை என்ற ஆயுதத்தை கையில் தூக்கியுள்ளதாக அவர் குற்றஞ்சாட்டினார்.

முன்னதாக ஈரானின் அணு உற்பத்தி தளங்கள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக இஸ்ரேல் கூறியிருந்தது. மேலும் பொருளாதார தடைகளை தளர்த்த வேண்டுமானால் அணு ஆயுத உற்பத்தியை ஈரான் நிறுத்தவேண்டும் என்று அந்நாடு கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply