சிகாகோவில் வார விடுமுறையில் துப்பாக்கி சூடு: 14 பேர் பலி-80 பேர் காயம்
அமெரிக்காவின் மூன்றாவது பெரிய நகரமான சிகாகோவில் வார விடுமுறை தினத்தன்று நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் 14 பேர் பலியானதுடன் 80 பேர் காயமடைந்தனர். அந்நகரில் கடந்த வியாழன் மாலையிலிருந்து திங்கள் அதிகாலை வரை ஐம்பதுக்கும் மேற்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றது. இது ஒருபோதும் ஏற்கத்தக்கதல்ல என்று தெரிவித்த சிகாகோ நகர காவல்துறை கண்காணிப்பாளரான கேரி மெக்கார்த்தி துப்பாக்கி உபயோகிப்பவர்கள் பெருகியதே இச்சம்பவங்களுக்கு முக்கிய காரணம் என பழி சுமத்தினார். துப்பாக்கி சூடு நடத்திய 5 பேரை போலீசார் சுட்டதில் 2 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.மூன்று இடங்களில் போலீசார் துப்பாக்கியால் சுட்டவர்களை சுற்றிவளைத்த போது, அவர்கள் போலீசாரை நோக்கி துப்பாக்கியால் சுட ஆரம்பித்தனர். இதனாலேயே போலீசார் அவர்களை சுட நேர்ந்ததாக அவர் கூறினார். ஞாயிறன்று மட்டும் அந்நகரில் 21 துப்பாக்கி சூடு சம்பவங்கள் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply