சுதந்திர தேசத்தை பாதுகாக்க நிறைவேற்று ஜனாதிபதி முறையை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்த வேண்டும்
இலங்கையை எதிர்காலத்தில் சுதந்திர தேசமொன்றாகப் பாதுகாத்துக்கொள்ள வேண்டுமாயின், ஜனாதிபதி முறை தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படல் வேண்டுமென பிரதமர் தி.மு.ஜயரத்ன கூறினார். ஜனாதிபதி முறை சம்பந்தமாக பல்வேறு கருத்துக்கள் நிலவினாலும், இந்த நாட்டின் பாதுகாப்பு மற்றும் எதிர்கால இருப்புக்கு ஜனாதிபதி முறையைப் போன்றே தற்போதைய ஆட்சி முறையும் அவசியமென அவர் கூறினார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பளைத் தேர்தல் தொகுதியைச் சேர்ந்த பிரதிநிதிகளுக்கான சம்மேளனம் பிரதம தி.மு.ஜயரத்ன தலைமையில் கம்பளை தேசிய மரபுரிமைகள் நிலையத்தில் நடைபெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கம்பளைத் தேர்தல் தொகுதி கிளைச் சங்கங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்த சம்மேளனத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.
அங்கு கூடியிருந்தோர் முன்னிலையில் பிரதமர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,
தேர்தலைப் போன்றே ஒரு நாட்டின் அபிவிருத்தியானது தனி நபர்களின் முன்னேற்றம், உறவினர்களின் முன்னேற்றம் மற்றும் இறுதியில் முழு நாட்டினதும் முன்னேற்றத்தினைப் பலப்படுத்துவதற்கு காரணமாக அமையும், எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களின்போது வாக்காளர்கள் புரிந்துணர்வுடன் நடந்து கொள்ளுதல் வேண்டும். சில வேட்பாளர்களின் ஏமாற்று நடவடிக்கைகளுக்கு ஆளாகி வாக்காளர்கள் நிர்க்கதிக்காளாகும் சந்தர்ப்பங்களை நாம் கண்கூடாகக் கண்டுள்ளோம்.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசாங்கமானது எவரது தனிப்பட்ட முன்னேற்றத்தினைக் கருத்திற்கொண்டு இந்த நாட்டில் அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில்லை. எதிர்காலத்திலும் பல பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் இந்த நாட்டில் ஆரம்பிக்கப் படவிருப்பதுடன் அவையனைத்தும் பொது மக்கள் மேம்பாட்டிற்காகவே மேற்கொள்ளப்படும்.
இலங்கையில் 4 இனங்களையும் சேர்ந்த 5 மதங்களைப் பின்பற்றுபவர்கள் வாழ்கின்றனர். ஆனாலும் நாம் அனைவரும் இனம், மதம் என பிரிந்து செயற்படக் கூடாது. சீனாவில் பல இனத்தவர்கள் வாழ்கின்றனர். அவர்கள் தம்மை சீனர்கள் என்றே கூறிகின்றனர். இந்தியர்கள், பாகிஸ்தானியர்கள் என அவரவர் நாட்டின் அபிமானத்தை எடுத்தியம்பும் வகையில் அந்த நாட்டவர்களால் வாழ முடியுமாக இருந்தால் ஏன் எம்மால் இலங்கையர் என வாழ முடியாது? நாம் ஒரே நாட்டில் ஒரே இனமாக ஒற்றுமையுடன் சகவாழ்வு வாழவேண்டும்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தற்போது 63 வருடங்கள் பூர்த்தியாகியுள்ளது. சுதந்திரத்துக்குப் பின்னர் அதிக காலம் இந்த நாட்டுக்குத் தலைமை தாங்கிய கட்சி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியாகும். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வரலாற்றினைப் போன்றே இலங்கையின் வரலாற்றிலும் ஒரு குறுகிய கால எல்லைக்குள் பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள அரசாங்கம் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான எமது அரசாங்கமாகும். பண்டைய மன்னர் ஆட்சிக் காலத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படவில்லையென்று இங்கு நான் கூறவில்லை. ஆனாலும் 2005ம் ம் ஆண்டு முதல் இது வரையிலான ஒரு குறுகிய காலப் பகுதிக்குள் முழு நாட்டையும் உட்படுத்தியவாறு இவ்வாறான பாரிய அபிவிருத்தி நடவடிக்கைகள் வரலாற்றில் முன்னெப்போதும் மேற்கொள்ளப் படவில்லை.
பயங்கரவாதத்தில் இருந்து இந்த நாட்டை மீட்டெடுத்ததுடன் இந்த நாட்டை துரித அபிவிருத்திப் பாதையில் இட்டுச் செல்லும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்த நாட்டுக்கு அத்தியாவசியமான யுக புருஷர் ஆவார் எனவும் கூறினார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply