பிரேசிலுக்கு எதிரான கால்பந்து அரையிறுதி போட்டி: கோல் மழையில் ஜெர்மனி வெற்றி
உலக கோப்பை கால்பந்து ஜுரம் ரசிகர்களை வெகுவாக தொற்றிக் கொண்டிருக்கும் நிலையில் இன்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் பிரேசில் அணியும் ஜெர்மனி அணியும் மோதின. போட்டி தொடங்கியதில் இருந்தே பந்து ஜெர்மனி வீரர்களின் கட்டுப்பாட்டில் தான் அதிக நேரம் தவழ்ந்தது. அந்த அணிக்கு 11 வது நிமிடத்தில் தாமஸ் முல்லர் அசத்தலான முதல் கோல் அடித்து கோல் கணக்கை துவக்கி வைத்தார். பின்னர் ஆட்டத்தின் 22வது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் க்ளோஸ் 2வது கோல் அடித்தார். இந்த கோலை அடித்ததன் மூலம் உலக கோப்பை கால்பந்து வரலாற்றில் 16 கோல்கள் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை ஜெர்மனி வீரர் க்ளோஸ் பெற்றார்.
அதன் பின் ஆட்டத்தின் 24 மற்றும் 26வது நிமிடங்களில் ஜெர்மனி வீரரான க்ரூஸ் தொடர்ந்து இரண்டு கோல் அடித்து அணியின் கோல் கணக்கை நான்காக உயத்தினார். 29வது நிமிடத்தில் ஜெர்மனி அணிக்காக சாம் கேதிரா மேலும் ஒரு கோல் அடிக்க கோல் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்தது. முதல் பாதி ஆட்டம் முடிவடைந்த போது ஜெர்மனி 0௫ என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கிய உடன் ஜெர்மனி வீரர் தங்கள் ஆக்ரோஷத்தை கொஞ்சம் குறைத்துக் கொண்டனர். ஆனாலும் ஆட்டத்தின் 69வது நிமிடம் மற்றும் 79வது நிமிடம் என பத்து நிமிடத்தில் இரண்டு கோல்களை மீண்டும் மீண்டும் அடித்த ஜெர்மனி வீரர் ஷர்ர்ல் அணியின் கோல் கணக்கை 7 ஆக உயர்த்தினார். கடைசியாக ஆட்டத்தின் 90வது நிமிடத்தில் பிரேசில் அணிக்கு ஆறுதல் கோலை அடித்தார் அந்த அணியின் ஆஸ்கார். இறுதியில் 1௭ என்ற கோல் கணக்கில் கோல் மழை பொழிந்து ஜெர்மனி வெற்றி பெற்றது. அந்த அணியின் நடுக்கள ஆட்டக்காரரான க்ரூஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply