உலகக்கோப்பை கால்பந்து :இறுதி போட்டியில் ஜெர்மனியுடன் மோதுகிறது அர்ஜெண்டினா

பெனால்டி ஷுட் அவுட் நெதர்லாந்தின் விளார் மற்றும் ஸ்னீஜ்ட்ர் அடித்த இரு ஷாட்களை அர்ஜெண்டினா கோல் கீப்பர் ரோமரோ அபாரமாக பாய்ந்து கோல் விழாமல் தடுத்தார். மறுபுறம் அர்ஜெண்டினா தனது நான்கு ஷாட்களையும் கோலாக்கியது. முடிவில் 4.2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அர்ஜெண்டினா இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது. உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் இன்று நடைபெற்ற பரபரப்பான இரண்டாவது அரை இறுதி போட்டியில் அர்ஜெண்டினா, நெதர்லாந்தை 4௨ என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது. முன்னதாக ஆட்டத்தின் முதல் மற்றும் இரண்டாம் பாதியில் இரு அணிகளும்  மிக கடுமையாக போராடியும் கோல் ஏதும் அடிக்க முடியவில்லை இதனையடுத்து கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

இதிலும் கோல் அடிக்கபடாததால் பெனாலிட்டி வாய்ப்பு அளிக்கப்பட்டது.

இதனை சரியாக பயன்படுத்திய அர்ஜெண்டினா அணி 4௨ என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இந்த வெற்றியை அடுத்து இறுதி போட்டியில் ஜெர்மனியுடன் அர்ஜெண்டினா மோதயுள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply