அமெரிக்காவில் 6 பேர் சுட்டுக்கொலை: மர்ம மனிதன் தாக்குதல்

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஹூஸ்டன் நகரின் புறநகர்ப்பகுதியான் ஸ்பிரிங் என்ற இடத்தில் குடியிருப்பு வாசிகளிடையே மோதல் ஏற்பட்டது. அப்போது மர்ம மனிதன் ஒருவன் திடீர் என்று துப்பாக்கியுடன் ஓடி வந்து மோதலில் ஈடுபட்டவர்களை சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். இதில் பலர் மீது குண்டு பாய்ந்தது. அவர்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்தனர்.அடுத்த நிமிடமே அங்கு போலீஸ் படை விரைந்து வந்தது. அதற்குள் மர்ம மனிதன் தப்பி ஓடிவிட்டான்.
துப்பாக்கியால் சுட்டதில் 6 பேர் பலியானார்கள். இதில் 4 பேர் சிறுவர்கள் ஆவார்கள்.

குடியிருப்பு வாசிகளிடையேயான சாதாரண சண்டையில் துப்பாக்கி சூடு நடத்தி 6 பேர் உயிரை பலி வாங்கும் அளவுக்கு விபரீதமாகி விட்டது. துப்பாக்கியால் சுட்ட மர்ம மனிதன் யார் என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply