கட்சி செயலாளர்களுடன் தேர்தல்கள் ஆணையாளர் இன்று முக்கிய சந்திப்பு

தேர்தல்கள் ஆணையாளர் மஹிந்த தேசப் பிரியவுக்கும் கட்சிச் செயலாளர்க ளுக்குமிடையிலான பேச்சுவார்த்தையொன்று ராஜகிரிய தேர்தல் செயலகத்தில் இன்று முற்பகல் நடைபெறவுள்ளது. இப்பேச்சுவார்த்தைக்காக அனைத்து அரசியல் கட்சிகளின் செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன் இன்று முற்பகல் 10 மணியளவில் இந்த சந்திப்பு இடம்பெறுமெனவும் தேர்தல் செயலகம் தெரிவித்தது. ஊவா மாகாண த்துக்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தொகுதிப் பங்கீடு தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினைகள் மற்றும் ஊவா மாகாண சபை தேர்தல் சம்பந்தமான விடயங்கள் இப்பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் பெறவுள்ளதாக செயலகத்தின் உயரதிகாரியொருவர் தெரிவித்தார்.

அதேவேளை, ஊவா மாகாண சபையைக் கலைப்பதற்கான திகதி தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் வெளிவருகின்ற நிலையில்

எதிர்வரும் கதிர்காம தேவாலய வருடாந்த ‘பெரஹர’ நிகழ்வுகள் முடிவுற்ற பின்னர் மேற்படி மாகாண சபை கலைக்கப்படலாம் என தெரிவிக்கப் படுகின்றது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply