அமைச்சர் ஜி.எல்.பீரீஸ் மீனவர் பிரச்சினை தொடர்பில் சுஷ்மாவை சந்தித்து பேச்சு
இந்தியா சென்றுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரீஸ், இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சுவராஜை டெல்லியில் சந்தித்து நேற்று (11) கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலின் போது, இந்திய இலங்கை மீனவர்கள் மீன்பிடிப்பதில் உள்ள நடைமுறை சிக்கல்கள் மற்றும் இலங்கை தமிழர் விவகாரம் உட்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்தும் இருநாட்டு வெளிவிவகார அமைச்சர்களும் விரிவான ஆலோசனை நடத்தியதாக தெரவிக்கப்பட்டுள்ளது.இந்த பேச்சு வார்த்தை தொடர்பில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவு செய்தித்தொடர்பாளர் சையது அக்பரூதின் மீனவர் பிரச்சினைக்கு நீண்ட கால தீர்வு காண வேண்டும் என இரு நாடுகளும் விரும்புவதாக தெரிவித்தார்.
இந்த ஆண்டில் மட்டும் இலங்கை சிறைப்பிடித்த தமிழகத்தை சேர்ந்த 805 மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 37 மீனவர்களையும் இந்தியா அழைத்து வர முயற்சிகள் எடுக்கப்படுவதாகவும் அக்பரூதின் குறிப்பிட்டுள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply