அரசியல் பிரச்னைக்கு தீர்வு காண உதவி: இந்தியாவிடம் இலங்கை கோரிக்கை

இலங்கையில் நல்லிணக்கப் பணிகளை மேற்கொள்வதில் ஏற்பட்டுள்ள பிரச்னைகளைத் தீர்ப்பதில் இந்தியாவின் உதவியைக் கோரியுள்ளதாக இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சர் ஜி.எல். பெரீஸ் கூறியுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜை தில்லியில் புதன்கிழமை சந்தித்துப் பேசிய அவர், இலங்கையின் கண்டி நகரில் இது குறித்து சனிக்கிழமை நடைபெற்ற கூட்டமொன்றில் பேசினார்.அப்போது, இலங்கையில் அனைத்து கட்சிகளின் பங்கேற்புடன் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக அமைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தேர்வுக்குழு குறித்து இந்திய வெளியுறத்துறை அமைச்சரிடம் விளக்கினேன்.அந்தக் குழுவை தமிழ் தேசிய கூட்டணி உள்ளிட்ட அமைப்புகள் புறக்கணிப்பதால் ஏற்பட்டுள்ள பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா உதவ வேண்டுமென அவரிடம் கேட்டுக்கொண்டேன் என்று தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply