நுழைய உள்ளார் சந்திரிகா குமாரதுங்க மீண்டும் அரசியலில்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க 10 அம்சங்களை உள்ளடக்கிய கொள்கைத்திட்டத்துடன் அரசியலில் மீண்டும் நுழைய உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.தேசிய செய்தித்தாள் இதனை தெரிவித்துள்ளதுடன் சந்திரிக்கா இது குறித்து விரைவில் அறிவிப்பினை வெளியிடுவார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
அவர் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட விரும்புகிறாரா என்பது தெரியாது, ஆனால் அவர் இரு பிரதான கட்சிகளினது பிரமுகர்களுடனும் இது குறித்து ஆராய்ந்துள்ளார், தற்போதைய அரசாங்கம் குறித்து அதிருப்தியிலிருக்கும் பல மூத்த அமைச்சர்களுடனும் அவர் இது குறித்து பேசியுள்ளார் என்றும் தெரிவித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply