மலேசியாவில் கடத்தல்காரர்களால் போலீஸ்காரர் சுட்டுக்கொலை
மலேசியாவின் போர்னியோ தீவுகளில் ஒன்றான மபுல் தீவில் உள்ள சபா மாநிலத்தில் புகழ் பெற்ற நீச்சல் தலங்கள் பல உள்ளன. இங்குள்ள ஒரு விடுதிக்குள் நேற்றுமுன்தினம் நள்ளிரவு முகமூடி அணிந்தபடி 8 மர்மநபர்கள் திடீரென புகுந்தனர். ஆயுதம் ஏந்திய அந்த கும்பல் அங்கிருந்த ஒரு போலீஸ்காரரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். மேலும் ஒருவரை கடத்தி சென்று விட்டனர்.
கடத்தல்காரர்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த சுலு தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்று தெரிகிறது. படகில் தப்பி ஓடிய மர்மகும்பலை போலீசார் தேடி வருகிறார்கள். சபா மாநிலம் ஆள்கடத்தல், போதை மருந்து மற்றும் மானிய டீசல் எண்ணெய் கடத்தல்களுக்கு பெயர் போன பகுதியாகும்.இங்கு சமீபத்தில் சுற்றுலாப்பயணிகள் கடத்தப்பட்டதையடுத்து மலேசிய அரசு பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply