சர்வதேசத்தையும், தமிழ் மக்களையும் ஏமாற்றும் தொடர் முயற்சியை TNA கைவிட வேண்டும்
சர்வதேசம் கைகொடுக்கும், ஐ.நா விசாரணைகளில் அரசு ஆட்டம் காணும் என்பதெல்லாம் பகற் கனவு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது தமிழ் மக்களையும், சர்வதேசத்தையும் தொடர்ந்தும் ஏமாற்றிக் கொண்டிருப்பதை விடுத்து அம்மக்களின் நிம்மதியான எதிர்கால வாழ்விற்கு ஏற்றதொரு தீர் வினைக்காண உடனடியாக முன்வர வேண்டுமென புத்திஜீவிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியா, அமெரிக்கா, நோர்வே, கனடா வரிசையில் இப்போது தென்னாபிரிக்காவுடன் இணைந்து சில வருடங்களைக் கடத்துவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளாது உள்நாட்டில் அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி ஒரு தீர்வினைக் காண தமிழ்க் கூட்டமைப்பு முன்வர வேண்டும். எனவும் அவர்கள் கோரியுள்ளனர்.
சர்வதேச விசாரணை நடைபெறும் எனவும் அதன் மூலம் அரசாங்கம் ஆட்டம் காணும் என தமிழ்க் கூட்டமைப்பு தானும் நம்பி தமிழ் மக்களையும் நம்ப வைத்து ஏமாற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால் அப்படியெதுவுமே ஒருபோதும் நடந்து விடாது.
அது வெறும் பகற்கன வாகவே கலைந்து செல்லும், மாறாக தமிழ் மக்களே தொடர்ந்தும் இன்னல்களைச் சந்திக்க நேரிடும் எனவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைகளுக்கு ஆதரவளித்து வந்த நாடுகள் பலவும் சோர்வுற்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள நிலையில், இறுதியில் தமிழ்த் தரப்பு அரசாங்கத்திடமே சரணடைய வேண்டிய நிலை நிச்சயம் தோன்றும். தமிழ் மக்களுக்காக குரல் கொடுப்பதாகக் கூறிவரும் தமிழ்க் கூட்டமைப்பு அதற்கு முன்னதாக அரசுடன் பேசி ஒரு தீர்வைக் காண்பதே சிறந்தது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply