தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினை பெரிதாக பொருட்படுத்தப் போவதில்லை : மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எதிர்ப்பினை தான் பெரிதாக பொருட்படுத்தப் போவதில்லையென வட மாகாண ஆளுநராக மீண்டும் தனது பதவியை பொறுப்பேற்றுள்ள மேஜர் ஜெனரல் ஜீ. ஏ. சந்திரசிறி நேற்று தெரிவித்தார். கூட்டமைப்பினரின் எதிர்ப்பும் வட மாகாண சபையின் புறக்கணிப்பும் எனக்கொன்றும் புதிதல்ல என தெரிவித்த ஆளுநர் “நாய் குரைப்பதற்காக மலை இறங்காது என்பது அனைவரும் அறிந்த உண்மை” யெனவும் சுட்டிக் காட்டினார்.
வட மாகாண ஆளுநராக மீண்டும் நான் பதவியேற்றமையை கூட்டமைப்பின் உறுப்பினர்களும் வட மாகாண முதலமைச்சரும் புறக்கணித்திருந்தாலும் அவர்களுக்கு எனது அன்பையும் காருண்யத்தையுமே வெளிப்படுத்த விரும்புகின்றேன் எனவும் அவர் கூறினார். தொடர்ந்தும் 05 வருடங்களுக்கு ஆளுநராக பதவி வகிக்கவுள்ள இவர், வட மாகாண சபையின் கீழ் ஏற்கனவே ஆரம்பித்து வைக்கப்பட்ட 13 அபிவிருத்தித் திட்டங்களையும் வெற்றிகரமாக நிறைவுசெய்வதற்கு உறுதி பூண்டுள்ள அதேநேரம், மாகாண மக்களின் உடல் மற்றும் மன நலத்திற்காக ‘யோகா’ பயிற்சி வகுப்புக்களை விஸ்தரிக்க தீர்மானித்திருப் பதாகவும் கூறினார்.
வட மாகாணத்தில் யோகா பயிற்சி வகுப்புக்களை பரந்தளவில் முன்னெடுப் பதற்காக இலங்கை மற்றும் இந்தியாவைச் சேர்ந்த யோகா ஆசிரமங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். அரசியல் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு மேலதிகமாக ஆளுநர் தனக்குரிய அதிகாரங்களை பயன்படுத்தி கலாசாரம் மற்றும் மதங்களுக்கிடையிலான ஒழுக்க நெறிகளை கட்டியெழுப்புவதற்கான பாரிய வேலைத் திட்டங்கள் தன்னால் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
இந்நிலையில் வட மாகாண ஆளுநராக மீண்டும் இராணுவ அதிகாரி நியமிக்கப் பட்டுள்ளதை எதிர்த்து தமிழ் தேசியக் கூட்டமைப்பும், வட மாகாண சபையும் கடுமையான எதிர்ப்புக்களை வெளியிட்டு ள்ளன. பொதுமக்கள் சார்ந்த அரசியல் நிர்வாக நடவடிக்கைகளில் முன்னாள் இராணுவ அதிகாரியொருவர் தலையிடுவது சுதந்திரமான செயற்பாடுகளுக்கு இடைஞ்சல் ஏற்படுத்துமென தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் கடந்த ஐந்தாண்டு காலம் வட மாகாண ஆளு நராகப் பணியாற்றிய ஜீ. ஏ. சந்திரசிறி இப்பிராந்திய மக்களின் தேவைகளை நாடிபிடித்தறிந்து தனக்கு இயலுமான நன்மைகளையும் சேவைகளையும் செய்தவர். பாடசாலைகள் வீதிகள், வைத்திய சாலைகள். மாணவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகள்
என்பன வழங்கப்பட்டு பயங்கர வாதத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்றப்பட்டது. ஜீ. ஏ. சந்திரசிறியின் சேவைகளை அரச அதிகாரிகள், தொண்டர் அமைப்புகள் பொதுமக்கள், புனர்வாழ்வளிக்கப்பட்டோர் எனப் பல தரத்தினரும் பாராட்டியுள்ளனர். வழமையான அரசியல் குரோத நோக்கின் அடிப்படையிலே தமிழ் கூட்டமைப்பு இவரின் மீள் நியமனத்தை எதிர்க்கிறது. அரசின் அபிவிருத்திப் பணிகளில் மக்களின் கவனம் சென்றால் தங்களது அரசியல் பிழைப்புகள் தவிடிபொடியாக்கப்படும் என்ற அச்சத்தின் காரணமாகவே தமிழ் கூட்டமைப்பினர் இந்நியமனத்தை எதிர்ப்பதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். சகல தரப்பினராலும் பெறப்பட்ட தகவலின் அடிப்படையிலே ஜனாதிபதியவர்கள் மீண்டும் இவரை வட மாகாண ஆளுநராக நியமித்துள்ளார்.
மக்கள் சார்ந்த ஆளுநரின் அபிவிருத்தி பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் வட மாகாண சபை பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளியேற்ற வடக்கின் வசந்தம் ஒத்துழைக்கும்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply