இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது

தொடர்ந்து ஏழாவது நாளாக இஸ்ரேல் காசா மீதான தனது தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது.போர்நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும் என சர்வதேச அழுத்தங்கள் அதிகரித்துள்ளபோதிலும், இஸ்ரேல் காசா மீது விமானத்திலிருந்து குண்டுகளையும் பீரங்கி குண்டுகளையும் வீசிவருகிறது.காசா பக்கத்தில் இருந்து இஸ்ரேல் மீதான ரொக்கெட் வீச்சும் தொடர்ந்துவருகிறது.ஹமாஸ் இயக்கிய ஆளில்லா விமானம் ஒன்று அஷ்டொட் நகரத்தின் மீது பறக்கும்போது அதனை சுட்டு வீழ்த்தியதாக இஸ்ரேல் கூறுகிறது.லெபனான்-சிரியா போன்ற இடங்களிலிருந்து இஸ்ரேல் மீது ரொக்கெட் குண்டுகள் வந்து விழுந்துள்ளன. இஸ்ரேலும் அவ்விடங்களை நோக்கி பதிலுக்கு பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளது.கடந்த ஒருவார கால வன்முறையில் தமது தரப்பில் 170 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், இவர்களில் பெரும்பான்மையானோர் சாதாரணப் பொதுமக்கள் என்றும் பாலஸ்தீனர்கள் கூறுகின்றனர்.

பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தவிர்க்க இயன்ற அனைத்தையும் தாங்கள் செய்துவருவதாகவும், ஆனால் இஸ்ரேலிய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதைத் தடுக்க வேண்டும் என்பதில் தாம் உறுதியாக இருப்பதாகவும் இஸ்ரேல் கூறுகிறது.காசாவின் வடக்கில் வாழும் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறிவிடுங்கள், அவ்விடங்களில் குண்டுவீசப் போகிறோம் என்று இஸ்ரேல் கூறியதை அடுத்து தாம் நடத்துகின்ற பள்ளிக்கூடங்களில் 17,000 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாக ஐநா தெரிவிக்கிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply