ஞானம் அறக்கட்டளை சார்பில் தமிழ் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கில் யுத்தத்தினால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட  தமிழர்களுக்கு நிரந்தர வாழ்வாதார வருவாய்க்கான மூலாதாரத்தினை வழங்குவதற்காகவும், மாணவர்களுக்கு தரமான கல்வி வழங்கும் நோக்கத்துடனும் 300 கோடி ரூபாய் மதிப்புள்ள இரண்டாம் கட்ட நலத்திட்டப்பணிகள் லைகாவின் ஞானம் அறக்கட்டளையினால் வெற்றிகரமாக தொடங்கப்பட்டுள்ளது. ஆக்கபூர்வமான பல திட்டங்களை இலக்கு வைத்து பலத்த நிதி ஆதாரங்களுடன் தொடங்கப்பட்டுள்ள, இந்த மக்கள் நல திட்டங்களை செவ்வனே மேற்கொள்ளும் நோக்கில் முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு,  அம்பாறை மற்றும் மன்னார் போன்ற எட்டு மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள பிராந்திய காரியாலயங்களை லைகாவின் ஞானம் அறக்கட்டளையின் போஷகர் ஞானாம்பிகை அல்லிராஜா, லைகாவின் ஞானம் அறக்கட்டளை மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன், லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதித்தலைவர் பிரேம் சிவசாமி மற்றும் லைகா மொபைல் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கிறிஸ் டூலி ஆகியோர் கடந்த வாரம் திறந்துவைத்தனர்.”பட்டினி கிடப்பவனுக்கு மீன் ஒன்றை ஒரு வேளை உணவாக கொடுப்பதை விட, அவனுக்கு மீன்பிடிக்க கற்று கொடுப்பதன் மூலம் வாழ்நாள் முழுவதும் அவனுக்கு உணவளிக்க முடியும்” என்ற முதுமொழியை கருப்பொருளாக கொண்டே லைகாவின் ஞானம் அறக்கட்டளை இயங்கிவருகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் இந்தத் திட்டங்களை சுமுகமாகவும், திறமையாகவும் அமுல்படுத்துவதற்காக எட்டு அதிகாரிகளுடன் கூடிய சுமார் 40 பேர் கொண்ட பணியாளர்கள் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு, கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை, மன்னார் ஆகிய பகுதிகளில்  புதிதாக தொடங்கப்பட்டுள்ள பிராந்திய காரியாலயத்தில் கடந்த ஜூன் 22ஆம் தேதி நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பயனாளிகளுக்கு குடும்பங்களுக்கான வாழ்வாதார உதவிகள், தையல் இயந்திரங்கள், மாணவர்களுக்கான கல்வி நிதியுதவிகள், துவி சக்கரவண்டிகள், பென்சில்கள், பேனாக்கள், அப்பியாச புத்தகங்கள், மாற்று திறனாளிகளுக்கான மூன்று சக்கர வண்டிகள் என பல்வேறு அன்பளிப்பு பொருட்கள் ஆகியவை லைகாவின் ஞானம் அறக்கட்டளை நிறுவனத்திரனரால் வழங்கப்பட்டன.

அனைத்து பகுதிகளிலும் உள்ள பயனாளிகள் அனைவருக்கும் சேர்த்து 2000 துவிச்சக்கரவண்டிகள், 2000 தையல் இயந்திரங்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் 10,000 மாணவர்களுக்கு பாடசாலை பைகள், பாடசாலை சீருடைகள், எழுத்து உபகரணங்கள், அப்பியாச கொப்பிகள், வாசிப்பை ஊக்குவிக்கும் புத்தகங்கள், 5,00,000 பேனாக்கள், 500,000 பென்சில்கள், பாடசாலை செல்லும் மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கும் நோக்கில் மாலை நேர வகுப்புகளுக்கு நிதியளிப்பு, பல்கலைக்கழகம் செல்லும் நூறு மாணவர்களுக்கு மாதாந்த உயர்கல்வி உதவித்தொகை, தலைமைத்துவ பயிற்சி நெறிகளுக்கு நிதியளிப்பு, வாழ்வாதார திட்டங்களை ஊக்குவிக்கும் நோக்கில் நிதியுதவிகள் ஆகியவை இந்த நலத்திட்ட விழாவில் வழங்கப்பட்டது.

இதன் மூலம் வாடிக்கிடக்கும் மக்களுக்கு வசந்தம் ஏற்படுத்தி தருவதும், மாணவர்களுக்கு கல்வியில் ஞானம் அளிப்பதுமே ஞானம் அறக்கட்டளை தனது முழு முதற்கடமையாக கருதுவது கண் கூடாக தெரிவது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply