கச்சத்தீவை திரும்ப பெறக்கோரி வழக்கு: கருணாநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை திரும்ப பெறக்கோரி தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் மனுவுக்கு 4 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்யக்கோரி தி.மு.க. தலைவர் கருணாநிதி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. கடந்த 1974 மற்றும் 1976 ஆகிய ஆண்டுகளில் இந்தியா-இலங்கை இடையே மேற்கொள்ளப்பட்ட கச்சத்தீவு ஒப்பந்தத்தை ரத்து செய்து கச்சத்தீவை திரும்பப்பெற மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளது.இதற்கு மத்திய அரசின் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், கச்சத்தீவு என்றுமே தமிழகத்துக்கு சொந்தமான பகுதியாக இருந்ததில்லை என்றும், இந்த ஒப்பந்தத்தை திரும்பப் பெறுவதோ, ரத்து செய்வதோ முடியாது என்றும் திட்டவட்டமாக தெரிவித்து இருந்தது.

மேலும் தமிழக அரசின் சார்பிலும் ஒரு பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் நேற்று இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் எச்.எல்.தத்து, தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

கருணாநிதியின் சார்பில் ஆஜரான வக்கீல் விடுதலை, தமிழக அரசின் பதில் மனு மீதான எதிர் பதில் மனுவை தாக்கல் செய்வதற்கு கால அவகாசம் கேட்டார். அவருடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், 4 வாரங்களுக்குள் பதில் மனுவை தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply