லிபியாவில் உச்சகட்ட மோதல்: திரிபோலி விமான நிலையம் மூடப்பட்டது
லிபியாவில் 42 ஆண்டுகள் ஆட்சி செய்த முயம்மார் கடாபியை கடந்த 2011 ஆம் ஆண்டில் பதவியை விட்டு இறக்கி, சுட்டுக் கொல்ல உதவிய போராளிகள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் சுயாட்சி கோரி அங்கு தொடர்ந்து கலவரங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.கச்சா எண்ணெய் ஏற்றுமதியைப் பெரிதும் நம்பியுள்ள லிபியாவின் மூன்று முக்கிய துறைமுகங்களை கடந்த ஆகஸ்ட் மாதத்திலிருந்து தங்களது கட்டுப்பாட்டுக்குள் இவர்கள் வைத்துள்ளனர். போராளிகளின் கை உயர்ந்து வருவதையடுத்து பென்காசி நகரின் சர்வதேச விமான நிலையம் ஏற்கனவே மூடப்பட்டுள்ளது.லிபியாவில் அமைதியை ஏற்படுத்தும் முயற்சியில் ஐக்கிய நாடுகள் சபையை சேர்ந்த பார்வையாளர்கள் அங்கு முகாமிட்டு நிலைமைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில், முன்னாள் ஜெனரல் கலிபா ஹப்தாரின் ஆதரவாளர்கள் படையும், அரசின் ராணுவப் படையும் நேற்று போராளி குழுக்களுடன் பயங்கரமாக மோதின. இந்த மோதலில் தலைநகர் திரிபோலியில் ஏழு பேரும் பென்காசி நகரில் ஆறு பேரும் பலியாகினர்.
நிலமை மேலும் மோசமைடைந்து வருவதையடுத்து, தலைநகர் திரிபோலி மற்றும் மிஸ்ரதாவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களை மூடும்படி அரசு உத்தரவிட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி அங்கு அமைதியை நிலைநாட்டுவது சுலபமான காரியமல்ல என்பதை உணர்ந்து, ஐக்கிய நாடுகள் சபை தங்களது பார்வையாளர்களை லிபியாவை விட்டு வெளியேற்றியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply