இந்தியாவின் தலைமையில் 100 பில்லியன் டாலர்கள் முதலீட்டில் பிரிக்ஸ் வங்கி
‘பிரிக்ஸ்’ எனப்படும் பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு தனி மூலதனத்துடன் பொது வங்கி அமைக்கப்பட வேண்டும் என்று பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தி பேசினார். ஏற்கனவே, இவ்வமைப்பில் உள்ள இதர நாடுகளுக்கும் இதே எண்ணம் இருந்து வந்த நிலையில் 100 கோடி அமெரிக்க டாலர்களை ஆரம்ப முதலீடாக கொண்டு பிரிக்ஸ் மேம்பாட்டு வங்கியை தொடங்க இன்று முடிவு செய்யப்பட்டது.
இந்த வங்கியின் தலைமையகத்தை சீனாவில் அமைப்பது என்று ஒருமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வங்கியின் முதல் தலைவராக இந்தியாவும், முதல் ஆளுநர்கள் குழுவில் ரஷியாவும் இடம் பெறுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply