காஸா நிலவரங்கள் குறித்து ஜனாதிபதி ஆழ்ந்த அனுதாபம்
பலஸ்தீனில் உயிரிழந்த பொது மக்கள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தனது ஆழ்ந்த கவலையை வெளியிட்டுள்ளார். பலஸ்தீன ஜனாதிபதி மொஹமட் அப்பாஸை தொலைபேசியில் தொடர்புகொண்ட ஜனாதிபதி, பலஸ்தீனின் பிந்திய நிலவரங்கள் குறித்து அறிந்துகொண்டதுடன், உயிரிழந்த மக்களுக்குத் தனது ஆழ்ந்த கவலையையும் வெளியி ட்டார். காஸா பகுதியில் பலஸ்தீன மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உயிரிழ ப்புகள் குறித்து பலஸ்தீன ஜனாதிபதி அப்பாஸ், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு விளக்கமளித்தார். உயிரிழந்த மக்களுக்கு அனுதாபங்களைத் தெரி விப்பதாக ஜனாதிபதி இதன்போது கூறினார்.காஸா பகுதியில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களால் 170 பலஸ்தீனிய மக்கள்
உயிரிழந்ததுடன் ஆயிரத்துக்கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேல் தொடர்ந்தும் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
காஸா பகுதியில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் குறித்து கவலை வெளி யிட்டிருக்கும் இலங்கை அரசாங்கம், வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவர சம்பந்தப்பட்ட தரப்பினர் பேச்சு வார்த்தையில் ஈடுபட முன்வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளது.
அரசு கவலை
காஸா பகுதியில் அதிகரித்திருக்கும் வன்முறைகள் காரணமாக அப்பாவி உயிர்கள் பல இழக்கப்படுவதுடன், பாரிய சொத்தழிவுகள் ஏற்பட்டுள்ளன. இது தொடர்பில் ஆழ்ந்த கவலையடைவ தாகவும், எல்லைதாண்டிய ஆத்திரமூட்டும் செயற்பாடுகளை இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு விடுத்திருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பந்தப்பட்ட தரப்புக்கள் வன் முறைகளை முடிவுக்குக் கொண்டுவந்து பேச்சுவார்த்தைக்கான சூழ்நிலை யொன்றை உருவாக்குவதற்கு முன்வர வேண்டும். பிராந்தியத்தில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த க்கூடிய இறுதித் தீர்வை பேச்சுவார்த்தை மூலமே எட்ட முடியும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட் டுள்ளது.
மக்களின் உயிர்களைப் பாதுகாக்கக் கூடிய சரியான தீர்வொன்றுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் வருவார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் வெளிவிவகார அமைச்சு தனது அறிக் கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply