தென் அமெரிக்க நாடுகளுடன் உறவு வலுப்படும் பிரதமர் மோடி நம்பிக்கை
பிரிக்ஸ் வளர்ச்சி வங்கி அமைவதன் மூலம், தென் அமெரிக்க நாடுகளுக்கும், இந்தியாவுக்கும் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு மேம்படும் என பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். தென்அமெரிக்க நாடுகளின் வளர்ச்சியில் இருந்து இந்தியா கற்றுக்கொள்ள வேண்டிய அம்சங்கள் அதிகம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.விவசாயம்,தோட்டக்கலை, பேரிடர் மேலாண்மை, தகவல் தொழில்நுட்பம், ஆகிய துறைகளை மேம்படுத்த தென் அமெரிக்க நாடுகளுக்கு இந்தியா வல்லுநர்களை அனுப்பி வைத்துள்ளதாக பிரதமர் தெரிவித்தார்.புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் தென் அமெரிக்க நாடுகளுடன் இந்தியா இணைந்து செயலாற்றி வருவதாகவும் அவர் கூறினார். தொலைபேசி வழி மருத்துவம் தொலைபேசி வழிக்கல்வி, மின்னணு நிர்வாக முறை ஆகியவற்றில் தென் அமெரிக்க நாடுகளுடன் ஒத்துழைப்பை மேம்படுத்த இந்தியா முன்வந்துள்ளதாகவும் பிரதமர் கூறினார்.
தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சிறப்பறிவுத் திறனை பகிர்ந்து கொள்ள, தென் அமெரிக்க நாடுகளில் தகவல் தொழில்நுட்ப மையங்களை இந்தியா அமைக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply