கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில்கப்பம் பெறுவோரை கைது செய்ய உத்தரவு : போக்குவரத்து அமைச்சர் சீ.பி ரத்னாயக்க
புறக்கோட்டை பஸ்ரியன் மாவத்தையிலுள்ள பிரதான தனியார் பஸ்தரிப்பு நிலையத் தினுள் இடம்பெறும் கப்பம் பெறும் நடவடிக்கைகளை நிறுத்தவும் கப்பம் பெறுவோரை கைது செய்வதற்கும் உடனடியாக நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு தனியார் போக்குவரத்து அமைச்சர் சீ.பி ரத்னாயக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவுக்கு பணிப்புரை வழங்கியுள்ளார். பஸ்ரியன் மாவத்தை பஸ் தரிப்பிடத்திற்கு விஜயம் செய்த அமைச்சர் கப்பம் பெறும் நபர்களைபொலிஸாரின் ஒத்துழைப்புடன் கைது செய்யும் சுற்றிவளைப்புக்களை அதிகரிக்கு மாறு அறிவித்துள்ளார்.
பஸ் தரிப்பிடத்திலிருந்து உரிய நேரத்திற்கு பஸ்சேவைகளை ஆரம்பிக்குமாறு ஆலோசனை வழங்கிய அமைச்சர், பஸ் தரிப்பிடத்திலுள்ள குறைபாடுகளை திருத்தி பயணிகளுக்கு சிறந்த சேவை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்தார்.
பஸ் தரிப்பிடத்திலுள்ள சீ.சீ.ரி.வி. கெமராக் கட்டமைப்பை விஸ்தரிக்குமாறும் ஊழியர்களுக்கு வோகிடோக்கி தொலைபேசிகள் வழங்குமாறும் அமைச்சர் பணித்துள்ளார்.
பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே அமைச்சின் முதன்மை பொறுப்பு என்று குறிப்பிட்ட அவர் அதற்காக சகல நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கினார். பஸ்ரியன் வீதி பிரதான பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து தினமும் 1200 முதல் 1500 பஸ்கள் பயணம் செய்வதோடு நாளாந்தம் 2 இலட்சம் முதல் 2 1/2 இலட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply