மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதற்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம்
மலேசிய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டு 298 பேர் பலியான கொடூர சம்பவத்துக்கு சர்வதேச நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.அமெரிக்க அதிபர் ஒபாமா கூறும்போது, ‘‘இது மிக கொடூரமான சோக சம்பவம் என தெரிவித்துள்ளார். அதில் அமெரிக்கர்கள் யாரும் பயணம் செய்துள்ளனரா? என அறியும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மேலும் இந்த விஷயத்தில் உண்மையை கண்டறிய அனைத்து விதத்திலும் ஒத்துழைக்க தயார் என அறி வித்துள்ளார்.ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், இச்சம்பவத்துக்கு தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து மலேசிய பிரதமர் நஜப்புக்கு வெப் சைட் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். விசாரணைக்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார் என்றும் அறிவித்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் கூறும் போது, ‘‘இந்த விபத்து குறித்து ஐ.நா.சபை விசாரிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். இதற்கிடையே உக்ரைனின் கிழக்கு பகுதியில் விமானம் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை உக்ரைன் அரசு பிறப்பித்துள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply